இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இருந்தது.


இதனால், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைக்க வேண்டிய வீரர்கள் என ஒரு உத்தேச பட்டியலை அறிவித்திருக்கிறார். அதில், தோனி இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், நெட்டிசன்கள் ‘இது எதிர்ப்பார்த்தது’ தான் என கமெண்ட் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க: IPL 2022 Retention: ஐ.பி.எல்.லில் தக்கவைக்கப்படும் வீரர்கள் யார்? யார்? தெரியுமா...! யாருக்கெல்லாம் 'நோ' தெரியுமா...?


ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய கம்பீர், ருதுராஜ், ஜடேஜா, டு ப்ளெசி, சாம் குரான் ஆகியோரை தக்க வைப்பதாக தெரிவித்திருந்தார்.


முன்னதாக, முன்னணி  விளையாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், யார் யார் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிகாரப்பூர்வ விவரம் இன்று இரவு தெரிந்துவிடும்.


பிசிசிஐ விதிமுறைப்படி ஒரு அணி தக்கவைக்கும் முதல் நபருக்கு 16 கோடியும், இரண்டாவது நபருக்கு 12 கோடியும் கொடுக்க வேண்டும். மூன்றாவது, நான்காவது வீரர்களுக்கு தலா 8, 6 கோடிகளை கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிக தொகையை செலவு செய்தாலும் பரவாயில்லை என தோனியை நிச்சய்ம் சிஎஸ்கே தக்கவைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் வட்டாரமும் அந்த தகவலை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்ட நிலையில், கம்பீரின் கருத்து நெட்டிசன்களுக்கு கண்டெட்டாக கிடைத்திருக்கிறது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண