இந்தியாவில் ஆண்டுதோறும் டி20 போட்டிகளுக்கான ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இருந்தது.
இதனால், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி, கீழ்க்கண்ட வீரர்களின் பெயர்களை ஒவ்வொரு அணிகளும் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
சுனில்நரைன், ஆந்ரே ரஸல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
கனே வில்லியம்சன்
மும்பை இந்தியன்ஸ் :
ரோகித்சர்மா, ஜஸ்பிரித் பும்ரா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் :
விராட்கோலி, கிளன் மேக்ஸ்வேல்
டெல்லி கேபிடல்ஸ் :
ரிஷப்பண்ட், பிரித்விஷா, அக்ஷர் படேல், நோர்ட்ஜே
ராஜஸ்தான் ராயல்ஸ் :
சஞ்சு சாம்சன்
மேற்கண்ட வீரர்களின் பெயர்களையே ஒவ்வொரு அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியல் என்று அளித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. இந்த பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி இடம்பெறவில்லை. அடுத்த ஐ.பி.எல். தொடரில் லக்னோ, அகமதாபாத் அணிகளும் பங்கேற்க உள்ளதால் பல்வேறு வீரர்களும் புதிய அணிகளுக்கு மாற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கண்ட பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா, இஷான்கிஷான், சூர்யகுமார் யாதவ், சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, பாப்டுப்ளிசிஸ், டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக், சுப்மன்கில் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. இது அந்தந்த அணி நிர்வாகங்கள் அவர்கள் தொடர்வதை விரும்பவில்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்