KKR vs PBKS Live: கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றி ; விறுவிறுப்பாகும் ஐபிஎல் இரண்டாம் பாதி

ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 9 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 02 Oct 2021 12:21 AM
பஞ்சாப் அணி வெற்றி பெற 20 ஓவர்களில், 166 ரன்கள் எடுக்க வேண்டும்

20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பவர்ப்ளே முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்துள்ளது கொல்கத்தா

வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி களத்தில் இருக்க, பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 48/1

பவுண்டரியுடன் போட்டியைத் தொடங்கிய வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக, வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் ஓப்பனிங் களமிறங்கியுள்ளனர்

தமிழ்நாடு வீரர் ஷாரூக்கான், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்றைய போட்டியில் விளையாடுகிறார்

டிஎன்பிஎல் தொடரில் அசத்திய ஷாரூக்கான், பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் இன்று களமிறங்க உள்ளார்.

Background

ஐ.பி.எல். 2021ம் தொடரின் 45வது ஆட்டம் இன்று துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுக்கும் இனி வரும் ஆட்டங்கள் வாழ்வா? சாவா? என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 9 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 19 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. போட்டி இன்று நடைபெறும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொள்வது இதுவே முதன்முறை ஆகும்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.