ஐ.பி.எல் 2010:


ஐபிஎல் தொடர்பாக நாம் ஏற்கனவே 'ஐ.பி.எல் ரீகேப்' என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டு குறித்தும் விரிவான ரீவைண்ட் கட்டுரைகளை ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்பாக விரிவான ரீவைண்டை இந்த தொகுப்பில் காணலாம்


 


முதல் முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்:


.பி.எல் தொடர் தொடங்கப்பட்ட போது பெரும் எதிர்பார்ப்பு இரண்டு வீரர்கள் மீது இருந்தது. ஒருவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றொருவர் எம்.எஸ்.தோனி. இப்படி இரு பெரும் ஜாம்பவான்களின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம்.எஸ்.தோனியும் மும்பை இந்தியன்ஸ் அணியை சச்சின் டெண்டுல்கரும் வழிநடத்தினார்கள். அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு விறுவிறுப்பாக நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் அனல் பறந்தது என்றே சொல்ல வேண்டும். அதன்படி, இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகியோர் களம் இறங்கினார்கள்.


வெற்றிக்கு உதவிய ரெய்னா:


19 பந்துகள் களத்தில் நின்ற முரளி விஜய் 1 பவுண்டரி 2 சிகஸ்ர்கள் என மொத்தம் 26 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். 31 பந்துகள் களத்தில் நின்ற ஹெய்டன் 1 பவுண்டரி 1 சிக்ஸர் என மொத்தம் 17 ரன்களை மட்டுமே எடுத்தார். பின்னர் வந்த குட்டி தல சுரேஷ் ரெய்னா இறுதிப்போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார். கடைசி வரை களத்தில் நின்ற அவர் 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 57 ரன்களை குவித்தார். மறுபுறம் எஸ். பத்ரினாத் 14 ரன்களும், அந்த அணியின் கேப்டன் தல தோனி 15 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என மொத்தம் 22 ரன்களை குவித்தார். இவ்வாறாக சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது.


கோப்பை கனவில் களம் கண்ட சச்சின்:


169 ரன்கள் எடுத்தால் கோப்பை எங்களுக்கு என்ற முனைப்பில் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 8 பந்துகள் நின்று ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட் ஆனார். மறுபுறம் சச்சின் டெண்டுல்கர் அணிக்கு ரன்களை பெற்றுக்கொடுத்தார். அவருக்கு துணையாக அபிஷேக் நாயர் ஜோடி சேர்ந்தார். இதில், சச்சின் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 48 ரன்களை குவித்தார். நாயர் 26 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸர் என 27 ரன்கள் எடுக்க அடுத்து வந்த வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்க இடையில் அம்பதி ராயுடு 14 பந்துகளில் 21 ரன்களை குவித்தார். அதேபோல் பொல்லார் 10 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 27 ரன்கள் எடுக்க ஆனாலும் மும்பை அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.


அதன்படி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து கோப்பையை தவறவிட சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்களது முதல் ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது. அதுவும் மும்பை அணியின் சொந்த மைதானத்திலேயே கோப்பையை கைப்பற்றியது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.


அதிக ரன்கள் எடுத்த வீரர்:


 


2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் பெற்றார். அந்த சீசனில் அவர் 618 ரன்களை குவித்தார். மேன் ஆப் தி சீரிஸ் விருதையும் சச்சின் டெண்டுல்கர் தான் பெற்றார்.


 


அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்:


 


டெக்கான் ஜார்சர்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ப்ரக்யன் ஓஜா 2010  ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


 


மேன் ஆப் தி மேட்ச்:


 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா மேன் ஆப் தி மேட்ச் விருதை பெற்றார்.


 


ஆரஞ்சு தொப்பி:


 


2010 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் ஆரஞ்சு தொப்பி சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.


 


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!