ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்தியன் பிரீமியர் லீக்கில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸை பெங்களூரில் எதிர்கொண்டு வரும் நிலையில், தொடரை துவங்குகிறது. இதுவரை ஐ.பி.எல். பட்டத்தை வெல்லாத நான்கு அணிகளில் ஆர்சிபியும் ஒன்றாகும்.


கடந்தாண்டு, எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் தோல்வியை கண்டு வெளியேறியது. அதிக ரசிகர்கள் கொண்ட அணியாக உள்ள அந்த அணி தொடர்ந்து பல ஆண்டுகளாக கோப்பை வெல்லாதது ஒரு கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது. இதனால் 2022 ஐபிஎல் இல் RCB கேப்டன்சியில் மாற்றத்தைக் கண்டது. நட்சத்திர இந்திய பேட்டர் விராட் கோலிக்கு பதிலாக ஃபாஃப் டு பிளெசிஸ் கேப்டன் பொறுப்பேற்றார்.



இந்த ஆண்டு கப் நமதே


ஆர்சிபியின் ஒரு பிரபலமான வாசகம் அந்த அணியின் டேக் லைனாகவே இருந்தது. போட்டிக்கு முன்பு விளம்பரம் செய்யும் விதமாக - 'ஈ சாலா கப் நம்தே' (இந்த ஆண்டு, கோப்பை நமதே) என்ற வாசகம் பயன்படுத்தப்படும். விராட் கோலியே சொல்வது போல் இருந்த விளம்பரங்கள் கூட வந்தன. அதையே அந்த அணி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தினர். ஆனால் அந்த வாசகம் பல ஆண்டுகளாக வாசகமாக மட்டுமே இருந்தது. இந்த வாசகம் அந்த அணிக்கே பின்னடைவாக அமைந்தது. அதை வைத்து மற்ற அணி ரசிகர்கள் ஆர்சிபி-ஐ ட்ரோல் செய்யவும் தொடங்கினர்.


தொடர்புடைய செய்திகள்: MI vs RCB, IPL 2023 Live: முதல் போட்டியில் வெற்றி பெறுமா மும்பை; டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச முடிவு..!


இந்த ஆண்டு கப் இல்லை


அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அதே வாசகம் இந்த ஐபிஎல் சீசனிலும் RCB ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான கோஷமாக உள்ளது. இந்த வார தொடக்கத்தில், விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் ஆர்சிபி நிகழ்வில் கலந்து கொண்டபோது, முன்னாள் தென்னாப்பிரிக்க நட்சத்திரம், "ஈ சாலா கப் நஹி (இந்த ஆண்டு கோப்பை இல்லை)" என்று அந்த வாசகத்தை தவறாக கூறினார். இதனை கேட்ட அருகில் அமர்ந்திருந்த கோஹ்லி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். பின்னர் அதற்கு அர்த்தம் என்ன என்று கோலி அவருக்கு விளக்கினார்.






இவ்வருட ஆர்சிபி அணி


இன்று மும்பை அணியை எதிர்த்து ஆடிவரும் ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து பவர்பிளேவில் மும்பை அணியை சிதைத்தது. இஷான் கிஷன், க்ரீன், கேப்டன் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளது. இம்முறை கோப்பை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இவ்வருட ஐபிஎல்-இல் வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டோப்லி ஆகியோரின் கையொப்பங்களுடன் தங்கள் அணியை பலப்படுத்தியது; இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர் வில் ஜாக்ஸ் சில நாட்களுக்கு முன்பு தசை காயத்தால் போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக மைக்கேல் பிரேஸ்வெல்லை RCB அணியில் சேர்த்துள்ளது.