MI vs RCB, IPL 2023 Live: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களுரூ அணி வெற்றி..!

IPL 2023, Match 5, MI vs RCB: பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 02 Apr 2023 11:15 PM
பெங்களூரு அணி வெற்றி..!

16.2 ஓவர்களில் பெங்களூரு அணி 172 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 

MI vs RCB Live Score: டூ பிளஸ்சிஸ் விக்கெட்..!

சிறப்பாக ஆடிவந்த டூபிளஸ்சிஸ் 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 

MI vs RCB Live Score: 14 ஓவர்கள் முடிவில்..!

14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் குவித்துள்ளது.  

MI vs RCB Live Score: விராட் கோலி அரைசதம்..!

விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார். 12 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 113 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: 11 ஓவர்கள் முடிவில்..!

அதிரடி காட்டும் கோலி டூ பிளிசிஸ் ஜோடி ; 11 ஓவர்கள் முடிவில்  பெங்களூரு 108 ரன்கள் குவிப்பு. 

MI vs RCB Live Score: டூ பிளிசிஸ் அரைசதம்..!

10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் சேர்த்துள்ளது. டூ பிளசிஸ் 57 ரன்கள் குவித்துள்ளார். 

MI vs RCB Live Score: 9 ஓவர்களில்..!

9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்ப்பு. 

MI vs RCB Live Score: 8 ஓவர்களில்..!

ஆரம்பம் முதல் அதிரடி காட்டி வரும் பெங்களூரு அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் குவித்துள்ளது. 

MI vs RCB Live Score: 7 ஓவர்கள் முடிவில்..!

7 ஓவர்கள் முடிவில்  பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: பவர்ப்ளே முடிவில்..!

ஆரம்பம் முதல் அதிரடி காட்டி வரும் பெங்களூரு அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் குவித்துள்ளது. 

MI vs RCB Live Score: ஐந்து ஓவர் முடிவில்..!

ஐந்து ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 45 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: 4 ஓவர்கள் முடிவில்..!

4 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: மூன்று ஓவர்கள் முடிவில்..!

அதிரடியாக ஆடி வரும் பெங்களூரு அணி 3 ஓவர்கள் முடிவில் 30 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: இரண்டாவது ஓவர் முடிவில்..!

2 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: பெங்களூரு அணிக்கு டார்கெட்..!

பெங்களூரு அணிக்கு 172 ரன்கள் டார்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

MI vs RCB Live Score: முதல் ஓவர் முடிவில்..!

முதல் ஓவர் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.  

MI vs RCB Live Score: 19 ஓவர்கள் முடிவில்..!

19 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 149 -7. 

MI vs RCB Live Score: தொடர்ந்து 4 ஒய்டு..!

19வது ஓவரின் மூன்றாவது பந்தை நான்கு முறை ஒய்டாக வீசியுள்ளார் முகமது சிராஜ். 

MI vs RCB Live Score: 17 ஓவர்கள் முடிவில்..!

17 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 123-6. 

MI vs RCB Live Score: திலக் வர்மா அரைசதம்..!

பொறுப்புடன் விளையாடி வரும் திலக் வர்மா 32 பந்தி 53 ரன்கள் சேர்த்துள்ளார். 

MI vs RCB Live Score: 16 ஓவர்கள் முடிவில்..!

16 ஓவர்கள் முடிவில் மும்பை 111 - 6. 

MI vs RCB Live Score: 15 ஓவர்கள் முடிவில்..!

விக்கெட்டுகளை இழந்தாலும் 15 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது.  

MI vs RCB Live Score: 14 ஓவர்கள் முடிவில்..!

14 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: 13 ஓவர்கள் முடிவில்..!

13 ஓவர்கள் முடிவில் மும்பை 85- 4. 

MI vs RCB Live Score: 12 ஓவர்கள் முடிவில்..!

12 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: 11 ஓவர்கள் முடிவில்..!

11 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்துள்ளது. 

MI vs RCB Live Score: 10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

MI vs RCB Live Score: 9 ஓவர்கள் முடிவில்..!

9 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: விக்கெட்..!

நிதானமாக ஆடிவந்த சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். 

MI vs RCB Live Score: 8 ஓவர்கள் முடிவில்..!

நிதானமாக ஆடிவரும் மும்பை அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: 7 ஓவர்கள் முடிவில்..!

 7 ஓவர்கள் முடிவில் மும்பை 36 - 3. 

MI vs RCB Live Score: பவர்ப்ளே முடிவில்..!

மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் 29 ரன்கள் எடுத்துள்ளது. 

MI vs RCB Live Score: ரோகித் அவுட்..!

தொடக்கம் முதல் தடுமாறி வந்த ரோகித் சர்மா 10 பந்துகளை 1 ரன் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

MI vs RCB Live Score: 5 ஓவர்கள் முடிவில்..!

இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் மும்பை அணி 5 ஓவர்கள் முடிவில் 19 ரன்கள் எடுத்துள்ளது. 

MI vs RCB Live Score: 4 ஓவர்கள் முடிவில்..!

4 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: க்ரீன் அவுட்..!

களமிறங்கி 6 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட கேமரூன் க்ரீன் க்ளீன் போல்ட் ஆகியுள்ளார். 

MI vs RCB Live Score: 3 ஓவர்கள் முடிவில்..!

3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட்டை இழந்து 12 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: விக்கெட்..!

நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 10 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

MI vs RCB Live Score: இரண்டாவது ஓவர் முடிவில்..!

இரண்டாவது ஓவரில் சிறப்பாக ரன்காள் சேர்த்த மும்பை அணி இந்த ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: முதல் ஓவர் முடிவில்..!

முதல் ஓவர் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live Score: டாஸ்...!

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Background

ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு - மும்பை அணிகள் மோதவுள்ள நிலையில் இவ்விரு அணிகள் தொடர்பான புள்ளி விவரங்களை நாம் இங்கு காணலாம். 


நடப்பாண்டுக்கான 16வது ஐபிஎல் தொடர்  கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் சென்னை -குஜராத் அணிகளும், நேற்றைய ஆட்டத்தில் லக்னோ - டெல்லி,பஞ்சாப்  - கொல்கத்தா அணிகளும் மோதியது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு - மும்பை, ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 


இதில் பெங்களூரு - மும்பை அணிகள் மோதும் போட்டி இரவு 7.30 மணிக்கு  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. 


நேருக்கு - நேர் 


பெங்களூரு - மும்பை அணிகள் இதுவரை 30 முறை மோதியுள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் இவ்விரு அணிகளும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறது. இதில் 17 முறை மும்பையும், 13 முறை பெங்களூரு அணியும் ஜெயித்துள்ளது. கடந்தாண்டு நடந்த போட்டியில் கூட மும்பை அணியை பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 


பெங்களூரு அணி மும்பை அணிக்கு எதிராக அதிகப்பட்ச ஸ்கோராக 235 ரன்களும், குறைந்தப்பட்ச ரன்னாக 122 ரன்களையும் பதிவு செய்துள்ளது. இதேபோல் மும்பை அணி அதிகப்பட்சமாக 213 ஆகவும், குறைந்தப்பட்சம் 111 ரன்களையும் ஸ்கோர்களாக எடுத்துள்ளது. 


5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத பெங்களூரு அணியும் மோதுவது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக நடந்த 10 ஆட்டங்களில் மும்பை 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதேசமயம் இவ்விரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதைப் போல பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவாக உள்ளது. 


மைதானத்தைப் பொறுத்தவரை உள்ளூர் அணியான பெங்களூரு அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.அதேசமயம் மும்பை அணி விளையாடிய 13 போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 


இரு அணி வீரர்களின் விவரம் (கணிப்பு): 


பெங்களூரு அணி: பாப் டூ பிளிசிஸ் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், விராட் கோலி, மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷபாஸ் அஹமது, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்ளே, முகமது சிராஜ்


மும்பை அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் க்ரீன், ரமன்தீப் சிங், ஜோப்ரா ஆர்சர், ஹிருத்திக் ஷோக்கீன், சந்தீப் வாரியர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.