கடந்த 5 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றது ஆர்சிபி அணி.
ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பு.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 63 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் 64 வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
எழுச்சி பெறும் ஆர்சிபி:
முன்னதாக 13 லீக் போட்டிகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி உள்ளது. இன்னும் ஒரே ஒரு லீக் போட்டி மட்டுமே மீதம் இருக்கிறது. மே 18 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடுகிறது ஆர்.சி.பி.
இந்த சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி கடந்த 5 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் ஆர்.சி.பி ப்ளே ஆப் சுற்றிற்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது வரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி இந்த முறை ப்ளே ஆப் சுற்றிற்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் அந்த அணியின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அடுத்த கேப்டன் கோலி:
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
அவர் களத்தில் இருப்பது மற்ற வீரர்களுக்கு உற்சாகத்தை அளிப்பதாக இருக்கிறது. அதே போல் தான் பெங்களூரு அணியை பொறுத்தவரை விராட் கோலி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
விராட் கோலியால் அந்த அணியில் உள்ள வீரர்கள் எல்லோரும் உற்சாகம் அடைகின்றனர். கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்டவர் விராட். ப்ளே ஆப் சுற்றிற்கு எப்படியும் சென்று விட வேண்டும் என்று கடுமையாக போராடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஒரு வேளை பெங்களூரு அணியால் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் போனால் அடுத்த சீசனில் விராட் கோலியை அந்த அணியில் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Grandmaster Shyam Nikhil : 85-வது கிராண்ட்மாஸ்டர்..அசத்திய தமிழக வீரர் ஷியாம் நிகில்!
மேலும் படிக்க: IPL 2024 Playoffs: ப்ளே - ஆஃப்-ல் CSK, RCB.. வாய்ப்பு இருக்கு.. எப்படி தெரியுமா? - வாங்க பார்ப்போம்!