GT vs LSG Score LIVE: பேட்டிங்கில் சொதப்பிய லக்னோ.. குஜராத் மீண்டும் அபார வெற்றி
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
லக்னோவை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் அணி
கேப்டன் க்ருணால் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்
21 ரன்களில் ஆட்டமிழந்தார் பதோனி
3 ரன்களில் ஆட்டமிழந்தார் பூரான்
கடைசி 3 ஓவர்களில் லக்னோ அணிக்கு 76 ரன்கள் அவசியம்
அதிரடியாக விளையாடி வந்த டி-காக் 70 ரன்களில் ஆட்டமிழந்தார்
15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி130 ரன்களை சேர்த்துள்ளது
வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஸ்டோய்னிஷ்
லக்னோ வெற்றி பெற 6 ஓவர்களில் 107 ரன்கள் தேவை
11 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார் தீபக் ஹூடா
நடப்பு தொடரில் முதன்முறையாக களமிறங்கிய டி-காக் 31 பந்துகளில் அரைசதம் எட்டினார்
12 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 113 ரன்களை சேர்த்துள்ளது
10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 102 ரன்களை குவித்துள்ளது
லக்னோ அணி வெற்றி பெற 66 பந்துகளில் 136 ரன்கள் தேவை
அதிரடியாக விளையாடி வந்த கைல் மேயர்ஸ் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் அடித்த பந்தை ரஷீத் கான் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
8 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 88 ரன்களை குவித்துள்ளது
7 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 76 ரன்களை வீழ்த்தியுள்ளது.
பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 72 ரன்களை குவித்துள்ளது
5 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 64 ரன்களை குவித்துள்ளது
4 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 50 ரன்களை சேர்த்துள்ளது.
3 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 35 ரன்களை சேர்த்துள்ளது
2 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 16 ரன்களை சேர்த்துள்ளது
லக்னோ அணிக்கான முதல் பவுண்டரியை விளாசினார் கைல் மேயர்ஸ்
228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி முதல் ஓவர் முடிவில் 4 ரன்களை சேர்த்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை சேர்த்தது
93 ரன்களை குவித்து விளையாடி வருகிறார் கில்
18 ஓவர்கள் முடிவில் 202 ரன்களை குவித்தது குஜராத்
17.4 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 200 ரன்களை கடந்தது
17 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 194 ரன்களை சேர்த்துள்ளது
24 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார்
24 ரன்கள் எடுத்து இருந்தபோது பாண்ட்யா கொடுத்த கேட்ச் வாய்ப்பை லக்னோ அணி தவறவிட்டது
15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 176 ரன்களை குவித்துள்ளது
14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 156 ரன்களை குவித்துள்ளது
13.4 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ரன்களை சேர்த்துள்ளது
81 ரன்களை சேர்த்து இருந்த நிலையில் சாஹா ஆட்டமிழந்தார்.
12 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 142 ரன்களை குவித்துள்ளது
29 பந்துகளில் அரைசதம் கடந்தார் சுப்மன் கில்
10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்களை குவித்துள்ளது
8.1 ஓவர் முடிவில் குஜராத் அணி 100 ரன்களை கடந்தது
8 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 98 ரன்களை குவித்துள்ளது
7 ஓவ்ர்களில் குஜராத் 82 ரன்களை சேர்த்துள்ளது. லக்னோ அணியால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை
பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 78 ரன்களை குவித்துள்ளது.
வெறும் 20 பந்துகளில் அரைசதம் கடந்தார் சாஹா
5 ஓவர்களில் 67 ரன்களை குவித்தது குஜராத்
4 ஓவர்கள் முடிவிலேயே குஜராத் அணி 50 ரன்களை கடந்துள்ளது
அதிரடியாக விளையாடி வரும் சாஹா 18 பந்துகளில் 42 ரன்களை குவித்துள்ளார்
3.1 ஓவர்கள் முடிவில் குஜராத் 37 ரன்களை குவித்துள்ளது
2 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 23 ரன்களை சேர்த்தது
முதல் ஓவர் முடிவில் குஜராத் அணி 12 ரன்களை சேர்த்துள்ளது
சுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அபினவ் மனோகர், நூர் அகமது, மோகித் சர்மா, முகமது ஷமி
இம்பேக்ட் பிளேயர்ஸ்
அல்ஜாரி ஜோசப், தசுன் சனகா, கே.எஸ். பரத், சிவம் மாவி, ஜெயந்த் யாதவ்
கைல் மேயர்ஸ், டி காக், மனன் வோஹ்ரா, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருணால் பாண்டியா (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), யாஷ் தாக்கூர், ஸ்வப்னில் சிங், ஆயுஷ் படோனி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான் மற்றும் ஆவேஷ் கான்
இம்பேக்ட் பிளேயர்ஸ்
ஆயுஷ் பதோனி, டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, மன்கத், யுத்விர் சிங்
டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு செய்துள்ளது
நாடு முழுவதும் 499 நகரங்களில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் தொடர்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 51வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு தொடரில் இந்த இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில், குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், கேப்டன் ராகுல் இல்லாமல் க்ருணால் பாண்ட்யா தலைமையில் லக்னோ அணி களமிறங்குகிறது.
குஜராத் அணி நிலவரம்:
குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ரஷித்கான் மற்றும் நூர் அஹமத்தின் சிறப்பான பந்துவீச்சாள் குஜராத் அணி வெற்றிபெற்றது.
லக்னோ அணி நிலவரம்:
அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை கடைசியாக நடந்த நான்கு போட்டிகளில் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றாலும், புள்ளிகள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினாலும், லக்னோ அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துவிட்டு சென்றுள்ளார். லக்னோ அணிக்கு க்ருனல் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, முதல் முறையாக தம்பி ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக அண்ணன் க்ருனல் பாண்டியா கேப்டனாக இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.
நேருக்கு நேர்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 3 முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அந்த மூன்று முறையும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது. இதனால், குஜராத் அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்து வருகிறது. 2022 ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக மோதின. அந்த முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் 2022ம் ஆண்டில் பிளே ஆஃப்களில் மோதியது. அதிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஐபிஎல் சீசனிலும் லக்னோ அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மைதானம் எப்படி?
அகமதாபாத்தில் உள்ள ஆடுகளம் கடந்த சில போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 179 ஆக உள்ளது. அதேபோல், டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது கிட்டதட்ட 75 சதவீத விக்கெட்கள் வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்தனர். முந்தைய போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் எட்டு விக்கெட்கள் வீழ்ந்ததை தொடர்ந்து, பவர்பிளேவில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுப்பது வெற்றிகான வாய்ப்பாக அமையும். ஏனெனில், கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -