GT vs KKR, IPL 2023 LIVE: நம்பவே முடியாத பேட்டிங்..! ஒரே ஓவரில் 5 சிக்ஸர்..! கொல்கத்தா த்ரில் வெற்றி..!
IPL 2023, Match 13GT vs KKR: குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
கொல்கத்தா அணிக்காக கடைசி ஓவர் வரை போராடிய ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்ஸர் விளாசி கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார்.
17வது ஓவரை வீசிய ரஷித் கான் முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
14 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்துள்ளது.
29 பந்தில் 45 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி வந்த நிதிஷ் ராணா தனது விக்கெட்டை அல்ஜாரி ஜோசப்பிடம் இழந்து வெளியேறினார்.
சிறப்பாக இலக்கை நோக்கி முன்னேறும் கொல்கத்தா அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களைச் சேர்த்துள்ளது.
ராணா மற்றும் வெங்கடேஷ் ஐயர் 54 பந்துகளைச் சந்தித்து 100 ரன்களை சேர்த்துள்ளனர்.
அதிரடியாக வரும் கொல்கத்தா அணி 12 ஓவர்கள் முடிவில் 116 ரன்களை குவித்துள்ளது.
வெங்கடேஷ் ஐயர் தனது அதிரடி ஆட்டத்தால் 26 பந்தில் தனது அரைசதத்தினை விளாசியுள்ளார்.
கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி வருவதால் அந்த அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தால் 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெடுகள் முடிவில் 68 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐந்து ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் சேர்த்துள்ளது.
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் சேர்த்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.
19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் சேர்த்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த சாய் சுதர்சன் தனது விக்கெட்டை சுனில் நரேனிடம் பறிகொடுத்தார்.
அதிரடியாக ஆடி வரும் குஜராத் அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடி வரும் குஜராத் அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 144 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடிவந்த அபினவ் மனோகரை சுயாஷ் க்ளீன் போல்ட் ஆக்கினார்.
உமேஷ் யாதவ் வீசிய 13 ஓவரில் அபினோவ் மனோகர் அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டு அதகளப்படுத்தினார். இதன் ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடிவரும் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 12 ஓவர்கள் முடிவில் 101 ரன்கள் சேர்த்துள்ளது.
12வது ஓவரின் 4வது பந்தில் கில் தனது விக்கெட்டை இழந்தார். இது குஜராத் அணி இழக்கும் 2வது விக்கெட் ஆகும். இரண்டு விக்கெட்டுகளையும் சுனில் நரேன் தான் வீழ்த்தியுள்ளார்.
11 ஓவரை வீசிய பெர்குசன் இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார், இதன் மூலம் குஜராத் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 91 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் குஜராத் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் குவித்துள்ளது.
சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் சிறப்பான பார்ட்னர் ஷிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். குஜராத் அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்கம் முதல் அதிரடியாக ஆடி வரும் குஜராத் அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது.
7 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி வரும் குஜராத் அனி பவ்ர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களை எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பந்தில் விரத்திமான் சஹா தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி வரும் கில் இந்த ஓவரில் மிகச் சிறப்பான ஒரு பவுண்டரியை விளாசினார். இந்த ஓவர் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்று ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவரில் நிதானமாக ஆடி வந்த குஜராத் அணி இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசியுள்ளது. இந்த ஓவர் முடிவில் 17 -0.
நிதானமாக பேட்டிங்கை தொடங்கியுள்ள குஜராத் அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்துள்ளது.
குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி அகமதாபாத்தில் தொடங்கியது.
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியில் கள நிலவரத்தை காணலாம்.
16வது ஐபிஎல் சீசன்:
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 16வது ஐபிஎல் தொடரில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், குஜராத், கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் விளையாடி வருகிறது. இதில் இன்று நடக்கும் 13வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மாலை 3.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றது. அஹமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய ஒன்றாக மாறியுள்ளது.
மைதானம் எப்படி?
இந்த மைதானத்தில் இதுவரை 8 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 2 போட்டிகளிலும், 2வதாக பேட் செய்த அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. எந்த அணியும் 200 ரன்களை கடந்ததில்லை. அதிகப்பட்சமாக குஜராத் அணி சென்னை அணிக்கு எதிராக 182 ரன்களும், குறைந்த ஸ்கோர் ஆக கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 123 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் 2 ஆட்டங்களில் விளையாடி குஜராத் அணி இரு வெற்றிகளையும், கொல்கத்தா அணி தலா ஒரு வெற்றி, தோல்வியையும் பெற்றுள்ளது. முன்னதாக இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே மோதியுள்ளது. இதில் குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்)
சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், ராகுல் திவேடியா, ரஷித் கான், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள் ஆகியோர் குஜராத் அணியில் இடம் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், நாராயண் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர்,ஷர்துல் தாகூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் கொல்கத்தா அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் வீரர் (impact Player) யார்?
குஜராத் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக அபினவ் மனோகர், ஜோஷ்வா லிட்டில், மோஹித் ஷர்மா, தசுன் ஷனகா, கேஎஸ் பாரத் ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்புள்ளது. இதே கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா, என். ஜெகதீசன், ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய், சுயாஷ் சர்மா ஆகியோரில் ஒருவர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -