GT vs DC IPL 2022 Live: டெல்லியை சல்லி சல்லியாய் நொறுக்கி குஜராத் வெற்றி....!

GT vs DC IPL 2022 Live: குஜராத் - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்...

ABP NADU Last Updated: 02 Apr 2022 11:26 PM
டெல்லியை சல்லி சல்லியாய் நொறுக்கி குஜராத் வெற்றி....!

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்ததால் குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது/

ரஷீத்கான் சுழலில் சிக்கிய ஷர்துல் தாக்கூர்..!

நெருக்கடியான கட்டத்தில் ஆடி வரும் டெல்லி அணியின் முக்கிய வீரர் ஷர்துல் தாக்கூர் ரஷீத்கான் சுழலில் சிக்கி 2 ரன்களில் வெளியேறினார். இதனால், டெல்லி வெற்றிக்கு 22 பந்தில் 36 ரன்கள் தேவைப்படுகிறது. 

டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் அவுட்...!

டெல்லி அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் ரிஷப்பண்ட் 29 பந்தில் 7 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

6 ஓவர்களில் 54 ரன்கள்...! வெற்றிபெறப்போவது யார்?

டெல்லி அணியின் வெற்றிக்கு 6 ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்படுகிறது. ரிஷப்பண்ட் மற்றும் ரோவ்மென் பாவெல் களத்தில் இருப்பதால் டெல்லி ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

அதிரடிக்கு மாறிய ரிஷப்பண்ட்..! கை கொடுப்பாரா பாவெல்.!

ரிஷப்பண்டுடன் நிதானமாக ஆடி வந்த லலித்யாதவ் அவுட்டானதால், ரிஷப்பண்டுடன் அதிரடி வீரர் ரோவ்மென் பாவெல் ஜோடி சேர்ந்துள்ளார். இதையடுத்து, டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடிக்கு களமிறங்கியுள்ளார். 

லலித்யாதவ் அவுட்...! கரை சேருமா டெல்லி..!

டெல்லி அணிக்காக பொறுப்புடன் ஆடிவந்த லலித் யாதவ் 22 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகினார். இதனால், டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சிடையந்தனர்.  

நிதானமாக ஆடும் ரிஷப்பண்ட் - லலித் யாதவ்..!

டெல்லி அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப்பண்டும், லலித் யாதவும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வருகின்றனர். ரிஷப்பண்ட் 20 ரன்களுடனும், லலித் யாதவ் 10 ரன்களுடனும் களத்தில் ஆடி வருகின்றனர்.

6 ஓவர்களில் 44 ரன்கள்..! காப்பாற்றுவார்களா ரிஷப்பண்ட் - லலித் யாதவ் ஜோடி..!

டெல்லி அணி 6.2 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. களத்தில் ரிஷப்பண்டும், லலித் யாதவும் உள்ளனர். 

டெல்லியின் முதல் விக்கெட்டை சாய்த்த ஹர்திக்..!

குஜராத் அணி நிர்ணயித்துள்ள 172 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் டிம் செய்பெர்ட் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிரித்விஷா மற்றும் மன்தீப் சிங் ஆடி வருகின்றனர்.  இந்த விக்கெட்டை குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கைப்பற்றினார்.

டெல்லி அணிக்கு 172 ரன்கள் இலக்கு..!

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்துள்ளது. இதனால், டெல்லிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார் சுப்மன்கில்..!

குஜராத் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி ஆடி வரும் சுப்மன்கில் நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துள்ளார். அவர் 32 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 ரன்களை எடுத்துள்ளார்.

11 ஓவர்களில் 75 ரன்கள்..! அதிரடி காட்டுமா குஜராத்..!

டெல்லி அணிக்கு எதிராக பேட் செய்து வரும் குஜராத் அணி 11 ஓவர்களில் 75 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. பாண்ட்யா 21 ரன்களுடனும், சுப்மன்கில் 36 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்

விஜய்சஙகர் விக்கெட்டையும் இழந்தது குஜராத்...! காப்பாற்றுவாரா ஹர்திக்..!

குஜராத் அணியின் முக்கிய வீரர் விஜய்சங்கர் 20 பந்தில் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தற்போது, குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், சுப்மன்கில்லும் ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றனர்.

நிதானமாக ஆடும் விஜய்சங்கர் - சுப்மன்கில்

முதல் ஓவரிலே விக்கெட்டை பறிகொடுத்த குஜராத் அணிக்காக சுப்மன் கில்லும், விஜய் சங்கரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வருகின்றனர். 

நிதானமாக ஆடும் விஜய்சங்கர் - சுப்மன்கில்

முதல் ஓவரிலே விக்கெட்டை பறிகொடுத்த குஜராத் அணிக்காக சுப்மன் கில்லும், விஜய் சங்கரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வருகின்றனர். 

முதல் ஓவரிலே விக்கெட்டை பறிகொடுத்த குஜராத்

டெல்லி அணிக்கு எதிராக குஜராத் அணியின் மேத்யூ வேட் மற்றும் சுப்மன் கில் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், தொடக்கவீரர் மேத்யூ வேட் முதல் ஓவரிலே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 

டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார்.

2ஆவது வெற்றிக்கு கடுமையாக போராடுமா டெல்லி கேப்பிடல்ஸ்

தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய டெல்லி அணி 2ஆவது வெற்றிக்கு கடுமையாக போராடும் எனத் தெரிகிறது.

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.  முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகள் வெற்றி பெற்றதால், இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலில் இரண்டு அணிகளும் இருக்கும். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.