வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் முழங்கை காயம் காரணமாக 2024 ஆம் ஆண்டுக்கான எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாததால், இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வலது முழங்கையில் அடிபட்டது. ஸ்கேன் செய்து பார்த்ததில் மார்க் வுட்டுக்கு காயம் இருப்பது தெரியவந்தது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
இலங்கைக்கு எதிராக விளையாடினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார் மார்க் வுட். ஆனால் லார்ட்ஸ் மற்றும் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
கடினமாக உழைக்கிறேன்:
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியின் போதும் காயம் ஏற்பட்டதால் அவர் இந்த ஆண்டு முழுவதும் விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இதனிடையே மார்க் வுட் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,"எனது உடற்தகுதியில் நான் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைக்கிறேன், பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோக்களுடன் கூடுதல் வேலைகளைச் செய்கிறேன், இது இன்னும் ஏமாற்றமளிக்கிறது.
இருப்பினும், ஸ்டோக்சி (பென் ஸ்டோக்ஸ்) சொல்வது போல், 'வேகப் பந்துவீச்சாளராக இருப்பதன் ஒரு பகுதி' என்று நான் நினைக்கிறேன். 2025 ஆம் ஆண்டு தான் நான் விளையாடும் சூழல் ஏற்படும். இந்த ஆண்டு முழுவதும் ஓய்வெடுப்பதற்கும் மீண்டும் என்னை கட்டமைப்பதற்கும் நேரம் தேவைப்படுவதால் நான் போட்டிகளை இழப்பேன்"என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Paris Paralympics 2024: பாரீஸ் பாராலிம்பிக்.. இந்தியா விளையாடும் போட்டிகள் என்ன? பதக்க வாய்ப்பு உள்ளதா?
மேலும் படிக்க: Rishabh Pant: டிராவிட்டுக்கும் கம்பீருக்கும் உள்ள வித்தியாசம்.. உண்மையை உடைத்த ரிஷப் பண்ட்