ரசிகர்கள் ஏமாற்றம்:


அண்ஂமையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை வென்றது. ஆனால் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி மோசமான தோல்வியை சந்தித்தது.


முன்னதாக இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றவுடன் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 


இச்சூழலில் தான் இந்திய அணி செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தொடகும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் நடைபெற்று வரும் உள் நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.


கம்பீர் மிகவும் ஆக்ரோஷமானவர்:


இந்நிலையில் தான் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் இந்திய கிரிக்கெட்டி ஏற்பட்ட மாற்றம் குறித்து ரிஷப் பண்ட் பேசியுள்ளார். “ஒரு மனிதராகவும், பயிற்சியாளராகவும் ராகுல் டிராவிட் மிகவும் சமநிலையானவர் என்று நான் உணர்கிறேன். இது நல்லதாகவும், கெட்டதாகவும் இருக்கலாம். நேர்மறைகளும், எதிர்மறைகளும் உள்ளன. மேலும் அது எங்கு கவனம் செலுத்த விரும்புகிறது என்பதைப் பொறுத்தது. கம்பீர் மிகவும் ஆக்ரோஷமானவர், நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் அவர் ஒருதலைப்பட்சமாக இருக்கிறார்.


ஆனால் நீங்கள் சரியான சமநிலையைக் கண்டுபிடித்து மேம்படுத்த வேண்டும். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற ஆசிய அணிகள் சிறந்து விளங்குகின்றன. இந்திய அணியாக, எதிரணி எது என்பதைப் பொருட்படுத்தாமல், எங்கள் தரநிலைகளைப் பராமரிப்பதிலும், அதே தீவிரத்துடன் விளையாடுவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்"என்று கூறியுள்ளார்.