ஐ.பி.எல் 2024:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.
ஆன்லைனில் தொடங்கிய டிக்கெட் விற்பனை:
இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழலில் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைனில் தொடங்கியது.
கடந்த முறை நேரடியாக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதிகப்படியான கூட்டம் காரணமாக நிறைய சிக்கல்கள் எழுந்தன. அதனை தடுக்கும்பொருட்டு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை நடந்தது. எனினும், தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன. ஆனால் ரசிகர்கள் டிக்கெட் விற்பனையில் முறைகோடு நடந்திருக்கிறது என்பது போன்ற பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
ஆனால், டிக்கெட் விற்பனை பார்ட்னரான பேடிஎம் நிறுவனம் தொழிநுட்பக்கோளாறு ஏற்பட்டதாகவும் அதற்காக மன்னிப்பும் கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டது.
கோரிக்கை வைத்த அஸ்வின்:
இந்நிலையில், இந்திய வீரர் அஸ்வின், "சேப்பாக்கத்தில் தொடங்கும் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுக்கு நம்ப முடியாத அளவுக்கு டிமாண்ட் உள்ளது. எனது குழந்தைகள் இருவரும் தொடக்க விழா மற்றும் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள். சென்னை அணி நிர்வாகம் உதவி செய்யவும்" என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!