CSK vs SRH Live: சென்னை அணிக்கு 4வது தோல்வி..! வெற்றிக்கணக்கை தொடங்கிய சன்ரைசர்ஸ்..!

chennai super kings vs Sun risers hyderabad: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையேயான ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 09 Apr 2022 06:58 PM
அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா அவுட்...!

சன்ரைசர்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 50 பந்தில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

தோல்வியின் விளிம்பில் சென்னை..!

சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 18 பந்தில் 11 ரன்கள் மட்டுமே தேதவப்படுவதால் சென்னை அணி தோல்வியின் விளிம்பில் போராடி வருகிறது. 

100 ரன்களை கடந்த சன்ரைசர்ஸ்..! அதிரடியாக ஆடும் அபிஷேக் - திரிபாதி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இலக்கை நோக்கி ஆடிவரும் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை கடந்து அதிரடியாக வருகிறது.

சன்ரைசர்ஸ் அணிக்கு முதல் விக்கெட்..! ஆட்டத்தில் திருப்புமுனையா..?

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் 40 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை வீரர் முகேஷ் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதிரடியாக ஆடும் அபிஷேக்..! நிதானம் காட்டும் வில்லியம்சன்..!

சென்னை அணிக்கு எதிராக சன்ரைசர்சின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா அதிரடியாகவும், கேப்டன் வில்லியம்சன் நிதானமாகவும் ஆடி வருகின்றனர். அபிஷேக் சர்மா 23 பந்தில் 39 ரன்னும், வில்லியம்சன் 31 பந்தில் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

ஹைதராபாத் 7 ஓவர்களுக்கு 42 ரன்கள்..!

சென்னை அணி நிர்ணயித்த 155 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் ஹைதராபாத் அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்துள்ளது. 

ஹைதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்கு...!

சென்னை அணி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் எடுத்தது. இதனால், ஹைதராபாத் அணிக்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறிமுக வீரர் பந்தில் தோனி அவுட்..! அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்...!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நம்பிக்கை நட்சத்திரமாகிய தோனியை அறிமுக பந்துவீச்சாளர் யான்சென் ஆட்டமிழந்தார். 

கடைசி 3 ஓவர்களில் அதிரடி காட்டுமா சென்னை....?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் கடைசி 3 ஓவர்களில் தோனி - ஜடேஜா அதிரடியாக ஆடுவார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

அடுத்தடுத்து விக்கெட்டுகள்...! காப்பாற்றுவாரா தோனி..?

சென்னை அணியின் இளம் வீரர் ஷிவம் துபே 3 ரன்களில் நடராஜன் பந்தில் அவுட்டானார். அடுத்தடுத்து சென்னை அணி விக்கெட்டுகளை இழந்து வருவதால் தோனி - ஜடேஜா ஜோடியை ரசிகர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். 

மொயின் அலி அவுட்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

சென்னை அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த மொயின் அலி 35 பந்தில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 48 ரன்களில் மார்க்ரம் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

3வது விக்கெட்டை இழந்தது சென்னை..! அம்பத்தி ராயுடுவை அவுட்டாக்கிய வாஷிங்டன் சுந்தர்..!

சென்னை அணியின் முக்கிய வீரர் அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அதிரடிக்கு மாறிய மொயின் அலி..! 50 ரன்களை கடந்த மொயின்-அம்பத்தி ராயுடு பார்ட்னர்ஷிப்..!

சென்னை அணியின் முக்கிய வீரரான மொயின் அலி சென்னை அணிக்காக தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கியுள்ளார். மொயின் அலி – அம்பத்தி ராயுடு பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்துள்ளது.

சென்னை 12 ஓவர்களில் 84 ரன்கள்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. மொயின் அலி 26 ரன்னுடனும், அம்பத்தி ராயுடு 27 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 

10 ஓவர்களுக்கு 68 ரன்கள்...! அதிரடி காட்டுவார்களா மொயின் அலி - அம்பத்தி ராயுடு..?

சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை 52 ரன்களுக்கு 2 விக்கெட்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நடராஜன் பந்தில் போல்டாகி வெளியேறிதால் சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 

சிஎஸ்கேவின் ராபின் உத்தப்பா அவுட்

சிஎஸ்கே அணியின் ராபின் உத்தப்பா 15(11) ரன்களில் அவுட்டானார்.

சென்னை (பிளேயிங் லெவன்)

ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (சி), எம்எஸ் தோனி (WK), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா (டுவைன் பிரிட்டோரியஸுக்குப் பதிலாக) )

ஹைதராபாத் (பிளேயிங் லெவன்)

அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங் (அப்துல் சமத்துக்குப் பதிலாக), மார்கோ ஜான்சன் (ரொமாரியோ ஷெப்பர்டுக்கு பதிலாக), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்.

டாஸ் வென்ற ஹைதராபாத்

ஹைதராபாத் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் முதலில் சிஎஸ்கே பேட்டிங் செய்ய உள்ளது. 

Background

நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள 17ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது.  சிஎஸ்கே தனது முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்தது. 


தோனி கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்த பிறகு, அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் 23 ரன்கள் எடுத்தார். நல்ல பார்மில் இருக்கும் தோனி அணியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் நன்றாக விளையாடுவார் என்று ரசிர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


டுவைன் பிராவோ பந்து வீச்சில் சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை கொடுக்கிறார். கடைசி மூன்று போட்டிகளிலும் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிராக மூன்று விக்கெட்டுகள் உட்பட ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு அவரின் பந்துவீச்சு இன்றைய போட்டியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு அதிமகாக இருக்கிறது.



 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.