புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 

சம்பவத்தன்று நள்ளிரவில் அவர்களது தோட்ட வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

Continues below advertisement

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்தோரின் உறவினர்களை அமைச்சர் சுவாமிநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது உயிரிழந்தவரின் மனைவி அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.அவருக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் வாயடைத்துப்போய் நிற்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Continues below advertisement

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தாய் தந்தை மகன் என 3 பேரும் வெட்டி கொலை செய்யப்பட்டனர். கோவையில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வரும் செந்தில் குமார் என்பவர், திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனது சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் தங்கியுள்ளார்.

சம்பவத்தன்று நள்ளிரவில் அவர்களது தோட்ட வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தையும் பரிதாபமாக உயிரிழந்தார். நகைக்காக இந்த கொலை அரங்கேறியதா இல்ல வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் சுவாமிநாதன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது உயிரிழந்த செந்தில் குமாரின் மனைவி கவிதா அமைச்சரிடம் இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் தவறு தான் என கூறி சரமாரியாக கேள்வி எழுப்பினார். அவருக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் வாயடைத்துப்போய் நிற்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,

 

 

Continues below advertisement