CSK vs GT IPL 2023: 16வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரில் மொத்தம் 70 லீக் போட்டிகள், இரண்டு குவாலிஃபையர் போட்டிகள் மற்றும் ஒரு எலிமினேட்டர் போட்டி என இதுவரை 73 ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதில் லீக் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி மட்டும் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது, இது இரு அணிகளுக்கும் ப்ளேஆஃப் சுற்றுக்குள் வருவதற்கு ஏதுவாக இருந்தது. ப்ளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகளில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று அதாவது மே 29ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியுள்ளது. மழை காரணமாக போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் வெல்லும் அணி போட்டியோடு சேர்த்து கோப்பையையும் வெல்லும்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட காலம் முதல் இருக்கும் அணிகளில் சென்னையும் ஒன்று. தொடரில் கலந்துகொள்ளும் அணிகளில் ஒன்றாக இல்லாமல், 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இது மட்டும் இல்லாமல், இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் சென்னை அணி தனது 10வது இறுதிப் போட்டியை விளையாடவுள்ளது. அதேபோல், 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி தடை செய்யப்பட்டது. இதனால், சென்னை அணி களமிறங்கிய 14 ஆண்டுகளில் 12 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணி என்ற பெருமையை தன் வசப்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது சென்னை அணியை மிகவும் நேர்த்தியாக வழிநடத்தும் கேப்டன் தோனி தான். இவரது தலைமையில் சென்னை அணி மீண்டும் ஒரு கோப்பையை கைப்பற்றி, ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகள் வென்ற மும்பை அணியுடன் இணைந்து கொள்ளும்.
குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்த மட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு தான் ஐபிஎல் தொடரில் அறிமுகமானது. அறிமுகத் தொடரிலேயே கோப்பையை தன் வசப்படுத்தியுள்ள குஜராத் அணி இந்த ஆண்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிகளில் குஜராத் அணியும் ஒன்று. இதற்கு முன்னர் சென்னை மற்றும் மும்பை அணிகள் தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், கோப்பைகளையும் கைப்பற்றியது. அதேபோல் இம்முறை குஜராத் கோப்பையைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் அந்த அணி உள்ளது.
சென்னை vs குஜராத்
ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் தலா நான்கு முறை மோதியுள்ளன. அதில் குஜராத் அணி மூன்று முறையும், சென்னை அணி ஒரு முறையும் வென்றுள்ளது. குறிப்பாக போட்டி நடைபெறும் இந்த மைதானத்தில் இந்த தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளும் மோதிக் கொண்டன. அந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு CSK vs GT IPL 2023 Final LIVE Score: மீண்டும் கோப்பையை வெல்லப்போவது யார்? சென்னையா? குஜராத்தா?