நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை காண அகமதாபாத் சென்ற  சென்னை அணி ரசிகர்கள், ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்து படுத்து உறங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.


அகமதாபாத்தில் குவிந்த ரசிகர்கள்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. 70 லீக் போட்டிகள் மற்றும் 3 பிளே-ஆஃப் சுற்று போட்டிகளுக்குப் பிறகான இறுதிப்போட்டிக்கு, சென்னை மற்றும் குஜராத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடக்கவிருந்த, இறுதிப்போட்டியை காண ரசிகர்கள் சாரை சாரையாக படையெடுத்து இருந்தனர். அது சென்னையா? குஜராத்தா? என சந்தேகம் எழும் அளவிற்கு பல்லாயிரக்கணக்கான சென்னை ரசிகர்கள் மஞ்சள் உடையில் மைதானத்தை ஆக்கிரமித்து இருந்தனர். 


மழையால் ரிசர்வ்-டே:










 

வைரலான வீடியோ:

 

இந்நிலையில் அகமதாபாத் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சென்னை அணியின் ஜெர்சியை அணிந்த ஏராளமான ரசிகர்கள் அகமதாபாத் ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்து படுத்து உறங்கியுள்ளனர்.  இரவு 3 மணியளவில் அவர்களிடம் கேட்டபோது, தோனியை காண்பதற்காக மட்டுமே இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி, இவ்வளவு தூரம் பயணித்து அங்கு வந்ததாக கூறினர் என, அந்த வீடியோக்களை பதிவிட்டுள்ள நபர் குறிப்பிட்டுள்ளார்.

 

யார் இந்த ரசிகர்கள்?

 

இறுதிப்போட்டியை காண்பதற்காக சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும், ரசிகர்கள் அகமதபாத் சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஒரு நாள் பயணம், ஒரு நாள் போட்டியை பார்த்துவிட்டு அப்படியே நேரடியாக சொந்த ஊருக்கு திரும்புவது என்று திட்டமிட்டு இருப்பர்.  நீண்ட தூரம் பயணம் என்பதால் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. ஆனால், போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது, ரசிகர்களின் திட்டத்தை வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பிட்ட பட்ஜெட்டில் பயணத்தை முடிக்க திட்டமிட்டிருந்த இளைஞர்கள் பலர், கையில் பணம் இல்லாததால் போட்டியை பார்க்காமலேயே சொந்த ஊர்களுக்கு திரும்பும் சூழலுக்கு தள்ளபட்டுள்ளனர்.