சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தச் சூழலில் சென்னை அணியின் வீரர்கள் மற்றும் ஐபிஎல் கோப்பை இந்தியா திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கமும் சென்னை அணியை கொண்டாடும் வகையில் பல்வேறு ட்வீட்களை செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது சென்னை அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் ஃபிளமிங்கிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவு சென்னை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் சென்னை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் வீரர்களுக்கு அறிவுரை வழங்குவது மற்றும் பயிற்சி அளிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக நேற்று ஐபிஎல் கோப்பை சென்னை வந்தது. இந்தக் கோப்பை நேற்று சென்னை திநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் பூஜை செய்யப்பட்டது.இந்த பூஜை இந்தியா சிமிண்ட்ஸ் ஶ்ரீனிவாசன் மற்றும் அவருடைய மகளும் இந்திய சிமிண்ட்ஸ் தலைவருமான ரூபா குருநாத் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இந்தப் பூஜைக்கு பின் ஐபிஎல் கோப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இடத்திற்கு எடுத்த செல்லப்பட்டது. அதன்பின்னர் சென்னை அணி கோப்பை வென்றது தொடர்பாக இந்தியா சிமிண்ட்ஸ் ஶ்ரீனிவாசன் கருத்து தெரிவித்தார்.
அதில், அதில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை அணி குவாலிஃபையர் மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடிய போது மைதானம் முழுவதும் சென்னை ரசிகர்கள் நிரம்பி இருந்தனர். மைதானம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் தென்பட்டது. அதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சென்னையையும் தோனியையும் எப்போதும் பிரிக்க முடியாது. தோனி தான் சென்னை, சென்னை அணி தான் தோனி என்பது போல் இரண்டு ஒன்றோடு ஒன்றாக உள்ளது.
இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டிற்கே ஒரு பாடமாக அமைந்துள்ளது. டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு தோனி உள்ளிட்ட சென்னை வீரர்கள் இந்தியா வந்த பிறகு சென்னையில் ஒரு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார். இந்த விழா சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும்" எனக் கூறினார்.
மேலும் படிக்க: Hardik Pandya on Dhoni: ‛வானத்தை போல’ விஜயகாந்த் தான் தோனி... - ஹர்திக்கிற்காக தரையில் உறங்கிய நெகிழ்ச்சி!