ரசிகர்களின் விருப்பம்:



இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. அந்தவகையில் ரோகித் சர்மாவின் தலைமையில் தான் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாட உள்ளது. இதன் பின்னர் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


ஆனால் ரோகித் சர்மா இந்த ஐபிஎல் தொடரில் கூட சிறப்பாகத்தான் விளையாடி வருகிறார். அதனால் அவர் இப்போது ஓய்வை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சில ஆண்டுகள் அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். 


இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவேன்:


இந்நிலையில் துபாயில் இயங்கி வரும் வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ரோகித் சர்மா பல்வேறு விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “நான் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 17 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். நிச்சயமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த பயணம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.


இன்னும் சில ஆண்டுகளுக்கு நான் கிரிக்கெட் விளையாடுவேன். சர்வதேச கிரிக்கெட்டில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவேன். ஒவ்வொருவரும் தங்கள் நாட்டு அணியின் கேப்டனாக  தலைமையேற்று பணிபுரிவது அவர்களுக்கு கிடைத்த கெளரவம் மிகப்பெரியதாக இருக்கும்” என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அணிக்கு கேப்டனாக நான் இருப்பேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. ஆனால் என்னிடம் நிறைய மக்கள் சொல்லியிருக்கிறார்கள். நல்ல மனிதர்களுக்கு நல்ல விஷயம் நடக்கும் என்று அது கேப்டன் விசயத்தில் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.


ஒரே பாதைதான்:


நான் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற போது ஒரு அணியாக நாங்கள் ஒரே பாதையில் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். நான் எப்போதுமே தனிப்பட்ட சாதனைக்காக விளையாடியது கிடையாது” என்று கூறிய ரோகித் சர்மா ,”தனிப்பட்ட இலக்கு என்று எதுவும் கிடையாது. 11 பேரும் இணைந்து எப்படி செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி தர வேண்டும் என்பது குறித்து தான் நான் யோசிப்பேன்.


என் கிரிக்கெட் வாழ்க்கையில் பல உச்சங்களை விட சரிவை தான் சந்தித்து இருக்கிறேன். நான் ஒரு மனிதனாகவும் விளையாட்டு வீரராகவும் தற்போது நல்ல முறையில் இருக்கிறேன் என்றால், கடந்த காலத்தில் நான் கண்ட சரிவுகள்தான் காரணம்” என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா.


மேலும் படிக்க: Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!


மேலும் படிக்க: Riyan Parag: அடேங்கப்பா..ரோகித் சர்மா, ரிஷப் பண்டுக்கு அப்புறம் இப்டி ஒரு சாதனையா; அசத்தும் ரியான் பராக்!