ஐ.பி.எல். தொடரில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் வெற்றி கோப்பையுன் தியாகராய நகரில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர். 




சி.எஸ்.கே. வெற்றி - பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை:


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி கோப்பை கைப்பற்றியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக குழு சார்பில் ஐ.பி.எல் கோப்பையை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலில் வைத்து பூஜை செய்தனர்.  


முன்னாள் ஐ.சி.சி. தலைவர் ஸ்ரீனிவாசன்,  தேவஸ்தான தமிழ்நாடு நிர்வாக குழு தலைவர் சேகர் ரெட்டி உள்ளிட்ட அணியின் நிர்வாக குழுவினர்  ஐ. பி.எல் கோப்பையை தி.நகரில் உள்ள ஏழுமலை வெங்கடாசலபதி முன் வைத்து பூஜை செய்தனர்.


சி.எஸ்.கே. வெற்றி:


குஜராத் டைட்டன்ஸ், சென்னை அணிகளுக்கு இடையே கடந்த மே 28-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக போட்டி மறுநாளுக்கு (மே.29) ஒத்தி வைக்கப்பட்டது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்திருந்தார். 


சென்னை அணி பேட்டிங் செய்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இரவு 12.10 மணிக்கு போட்டி தொடங்கியது. 


171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு 15 வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டைக்கில் இருந்த ஜடேஜா, மோகித் சர்மா பந்தில் 6 மற்றும் 4 ரன்களை பறக்கவிட சென்னை அணி வெற்றிபெற்றது. இதன்மூலம், ஐபிஎல் தொடரில் 5வது முறையாக தோனி தலைமையிலான சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. 


சென்னையில் பாராட்டு விழா:


ஐ.பி.எல். கோப்பையை 5வது முறையாக தோனி தலைமையிலான அணி வென்ற நிலையில் அவர்களை அங்கீகரித்து பாராட்டும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலோ அல்லது நேரு உள்விளையாட்டு அரங்கத்திலோ ஒரு பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்யச் சொல்லி ஜப்பானில் இருந்தபடியே தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது.


சென்னையின் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா’


அதனடிப்படையில், நாளை (31 - 05 - 2023) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டில் இருந்து திரும்பிய பிறகு ஜூன் 2ஆம் தேதி அல்லது அதே மாதத்தில் ஒருநாள், தோனியையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் பாராட்டும் விதமாக விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜூன் 3ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதால் அதற்கு முந்தைய நாள் தோனிக்கான பாராட்டு விழாவை நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.




மேலும் வாசிக்க..


IPL 2023 Champion : ‘தோனியின் CSK அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா’ சென்னையில் நடத்த முடிவு..!


Sarathkumar: ‘நான் சும்மா சொன்னதை நீங்க உண்மைன்னு நம்பிட்டீங்க’ .. 150 வயது வரை வாழும் விஷயத்தில் பல்டி அடித்த சரத்குமார்..!