.பி.எல் தொடர்:


சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே அதிக சிக்ஸர்களை குவித்த வீரர் யார் என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.


 


சிக்ஸர் மழை பொழிந்த கிறிஸ் கெய்ல்:


.பி.எல் தொடரில் அதிக  சிக்ஸர்களாக குவித்த வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரும்,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடியவருமான  கிறிஸ் கெய்ல் இருக்கிறார். அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமானார். அதன்படி, கிங்ஸ் 11, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அந்தவகையில் கடந்த 2008 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஐ.பி.எல் தொடரில் விளையாடிய கெய்ல் 142 போட்டிகளில் 141 இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார்.


இதில் அதிரடியாக விளையாடி 4965 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 66 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 17  சிக்ஸர்களை விளாசி 175 ரன்களை குவித்தார். இது தான் ஐ.பி.எல் தொடரில் தனி நபர் அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. அதேபோல், .பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரரர் என்ற சாதனையையும் தன்வசமே வைத்துள்ளார் கிறிஸ் கெய்ல்.


அதன்படி, .பி.எல் தொடரில் 357 சிக்ஸர்களை பறக்க விட்டிருக்கிறார். அதேபோல் 6 சதங்களையும் விளாசியிருக்கிறார். கிறிஸ் கெய்லுக்கு அடுத்தபடியாக இருப்பவர் ரோகித் சர்மா தான். ரோகித் சர்மாவும் கடந்த 2008 ஆம் ஆண்டு டெக்கான் ஜார்ஜரஸ் அணிக்காக அறிமுகமனார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் 243 போட்டிகளில்  238 இன்னிங்ஸ்களில் விளையாடி 257 சிக்ஸர்களை பறக்கவிட்டிருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஏ பி டிவில்லியர்ஸ் இருக்கிறார்.


டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு வரை விளையாடிய இவர் 251 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி கேப்டன் எம்.எஸ்.தோனி 239 சிக்ஸர்களும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் விராட் கோலி 234 சிக்ஸர்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். .பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களில் மூன்று பேர் இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: Chris Gayle IPL Record: IPL-ல் அதிகபட்ச ஸ்கோர் 175...RCB அணிக்காக கிறிஸ் கெய்ல் படைத்த சாதனை!


 


மேலும் படிக்க: MS Dhoni: ஐ.பி.எல் கனவு அணி தேர்வு...தல தோனிக்கு கிடைத்த அந்த அங்கீகாரம்! விவரம் உள்ளே!