2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் உள்ளனர். இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் எஞ்சியபோட்டிகள் யுஏஇயில் நடத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பாதியில் நின்று போன ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. 


இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஆர்சிபி அணியின் வீரர்கள் தொடர்பாக சிலர் யாரும் அறியாத தகவல்களை தெரிவிக்கும் வகையில் ஒரு காணொலி இடம்பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் எப்போதும் 'போல்ட் டைரிஸ்' என்ற பெயரில் அவ்வப்போது அந்த அணி பதிவேற்றி வருகிறது. அந்தவகையில் தற்போது இந்த வீடியோவையும் பதிவேற்றி உள்ளது. 


அதில் முதலில் கே.எஸ்.பாரத் சில கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். அத்துடன் அத்லெடிக் பயிற்சியாளர் நவ்னித் கௌதம், மருத்துவர் சார்லஸ் மின்ஸ், நெட் பந்துவீச்சாளர் சுஷாந்த் மிஸ்ரா ஆகியோரும் சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். இதில் கேட்கப்பட்ட சில கேள்விகள் அதற்கு அவர்களின் பதில்கள்.




கே. ஆர்சிபி அணியில் யார் மிகவும் நகைச்சுவையானவர்?


ப. முகமது சிராஜ் மற்றும் சாஹல்.


கே. ஆர்சிபி அணியில் எந்த சுழற்பந்துவீச்சாளருக்கு கீப்பிங் செய்வது கடினம்?


ப. சாஹலுக்கு கீப்பிங் செய்வது கடினம்.


கே. ஆர்சிபி அணியில் யார் அதிகமாக பிசியோதெரபிக்காக வருவார்?


. நவதீப் செய்னி


கே. யார் அதிகமாக பேசிக் கொண்டே இருப்பார்?


ப. நவதீப் செய்னி


 






கே. பிசியோதெரபிக்காக அதிகம் வராத ஆர்சிபி வீரர் யார்?


ப. ஏபிடிவில்லியர்ஸ். ஏனென்றால் அவர் ஒரு சூப்பர் ஹீரோ


கே. ஆர்சிபி அணியில் அதிகம் ப்ரான்க் செய்யும் வீரர் யார்?


ப. முகமது சிராஜ் மற்றும் நவ்தீப் செய்னி


கே. ஆர்சிபி அணியில் ஃபிட் ஆக இருக்கும் வீரர் யார்?'


ப. விராட் கோலி


கே. கொரோனா பரிசோதனைக்கு எந்த வீரர் சரியாக வருவார்?


ப. கடந்த சீசனில் தேவ்தத் படிக்கல். 2021 சீசனில் டென் கிறிஸ்டின்


கே. கொரோனா பரிசோதனைக்கு யார் தமாதமாக வருவார்?


ப. முகமது சிராஜ்


கே. எப்போதும் யார் அதிகமாக சந்தேகங்கள் கேட்டு உங்களுக்கு தொலைப்பேசியில் அழைப்பார்?


ப. வாஷிங்டன் சுந்தர்.


கே. ஆர்சிபி அணியில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை யார் சரியாக எப்போதும் கடைப்பிடிப்பார்கள்?


ப. விராட் கோலி மற்றும் சாஹல்.


இவ்வாறு பல கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் பெங்களூரு அணிக்கு சிறப்பான ஒன்றாக இதுவரை அமைந்துள்ளது. ஏனென்றால் வழக்கத்திற்கு மாறாக இம்முறை பெங்களூரு அணி புள்ளிக்கள் பட்டியலில் தொடரின் தொடக்கம் முதலே முதல் நான்கு இடங்களுக்குள் இருந்து வருகிறது. அத்துடன் அந்த அணியின் டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் சிறப்பான ஃபார்மில் இருந்து வந்தனர். எனினும் தற்போது பெரிய இடைவேளை வந்துள்ளதால் மீண்டும் பெங்களூரு அணி அதேபோல் விளையாடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 


மேலும் படிக்க: IPL 2021| ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் : அடுத்தது என்ன ? பிசிசிஐ தீவிரம்!