தென் தமிழகத்தில்  முதல் முறையாக மதுரையில் சதுரங்க (செஸ்) திருவிழா 3 வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர்  சதுரங்க போட்டிகள்  வேலம்மாள் பொறியியல் கல்லூரியில்  நடைபெற்றது.


ரஷ்யா, இங்கிலாந்து , பிரான்ஸ், அமெரிக்கா, நியூசிலாந்து, பெலாரஸ், வியாட்னாம் உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 33 முதல் தர வீரர்கள் பங்கு பெறும் முத்துராமலிங்கம் சதுரங்க  கோப்பைக்கான போட்டிகள் கடந்த  23ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. மதுரை வேலம்மாள் கல்வி குழுமத்தின் சார்பில் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மதுரை சதுரங்க திருவிழா  கடந்த 23ஆம் தேதி முதல் 30 ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.


- Sivagangai: சிறைச்சாலையில் இயற்கை விவசாய பணி; பார்த்து வியந்த மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள்




மூன்றாவது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டிகள் கடந்த 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை ஏ,பி,சி, என மூன்று பிரிவுகளில் நடை பெறுகிறது. "ஏ" பிரிவில் நடைபெறும் சதுரங்க போட்டிகளில் ரஷ்யா, இங்கிலாந்து , பிரான்ஸ், அமெரிக்கா, நியூசிலாந்து, பெலாரஸ், வியாட்னாம், ஸ்ரீலங்கா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 33 முதல் தர வீரர்கள் பங்கு பெறுகின்றனர். ஏ பிரிவில் முதல் பரிசாக சாம்பியன் விருது பெறுபவருக்கு இருபது லட்சம் ரூபாய், பரிசு கோப்பை உள்பட ஒரு பைக்கும் வழங்கப்படுகிறது. இதே போல் "பி" பிரிவில் 1700 புள்ளிகள் பெற்று உள்ள சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டிகளும். இதில் வெற்றி பெறும் "பி" பிரிவு வீரருக்கு 2 லட்சம் ரூபாய் முதல் பரிசும் ஒரு பைக்கும் வழங்கப்படுகிறது. இதே போல் "சி" பிரிவில் 1500 புள்ளிகள் பெற்ற வீரர்கள் பங்கு பெறும் சதுரங்க வீரர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் பணமாகவும்,பைக் ஒன்றும் வழங்கப்படுகிறது.




தனித்துவமாக விளையாடும் வீரர்களுக்கு என 5 பைக்குகளும் மொத்தம் 8 பைக்குகள் மற்றும் 100 சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. முதல் பரிசுகள் தவிர பங்கேற்கும் சதுரங்க வீரர்களுக்கு ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகிறது. முத்துராமலிங்கம் சதுரங்க  கோப்பைக்கான போட்டிகள் வரும் 23ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு துவங்கிய 3வது சர்வ தேச சதுரங்க போட்டிக்கு கணினி மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. தற்போது இதுவரை 1600 பேர்  இளைஞர்கள்தான் கணினி வழியாக முன்பதிவு செய்துள்ளனர்.