இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பி வரும் ரன் மிஷின் கோலியை, சச்சினின் உதவியை நாடுமாறு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
லீட்ஸில் நடைபெற்று வரும் 3 வது டெஸ்டில், இந்திய கேப்டன் விராட் கோலி, ஜேம்ஸ் ஆண்டர்சனால் முதல் இன்னிங்சில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த நிலையில், கோலியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் உதவியை நாடுமாறு தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். இந்திய கேப்டன் உடனடியாக சச்சின் டெண்டுல்கரை அழைத்து அவரிடம் உதவி கேட்க வேண்டும் என்று கூறினார்.
லீட்ஸ் டெஸ்டில் வர்ணனையின்போது கவாஸ்கர், “விராட் கோலி உடனடியாக சச்சினுக்கு போன் செய்து நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டும்? . சிட்னி டெஸ்டில் சச்சின் செய்ததை செய்யுங்கள். நான் கவர் டிரைவ்களில் ஈடுபடமாட்டேன் என்று நீங்களே சொல்லுங்கள்” என்று கூறினார்.
மேலும், விராட் கோலி கவர் டிரைவ் விளையாடும் போக்கு அல்லது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச்சில் ஷாட் செய்ய முயற்சிப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது என்றும் கவாஸ்கர் கூறினார். 2014 ஆம் ஆண்டில், அவர் ஆஃப்-ஸ்டம்பைச் சுற்றி அதிகமாக வெளியேறினார் என்றும் தெரிவித்தார்.
Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!
இந்த தொடரில் இரண்டாவது முறையாக விராட் கோலி ஜேம்ஸ் ஆண்டர்சனால் வெளியேறினார். டெஸ்டின் முதல் நாளில், விராட், ஆண்டர்சனின் பந்து வீச்சில் நேராக டிரைவ் செய்ய முயன்றார். ஆனால் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்து வீசப்பட்டது. கோலியின் பேட்டில் பட்ட அந்த பந்து இறுதியில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் சிக்கியது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழாவது முறையாக விராட் கோலியை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை விராட் கோலியை வீழ்த்தியதில் ஆண்டர்சன் இப்போது நாதன் லியோனுக்கு இணையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக, 2019-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்திருந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கோலி சதம் அடிக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், 4 இன்னிங்ஸில் மொத்தம் 69 ரன்கள் அடித்துள்ளார், அதிகபட்சமாக 42 ரன்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ரன் மெஷின் விராட் கோலி பேட்டிங் களமிறங்கினால் சரவெடிதான். ஆனால் இப்போது, டெஸ்ட், ஒரு நாள், டி-20 என அனைத்து கிரிக்கெட் ஃபார்மேட்களிலும் கோலி செஞ்சுரி அடித்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது என ஸ்டாட்ஸ் சொல்கின்றது. இவையெல்லாம் கோலியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Ind vs Eng: நொந்து போய் வெளியேறிய கோலி... நக்கலாய் வழி அனுப்பி வைத்த இங்கிலாந்து ரசிகர்கள்!