லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் கோலி 7 ரன்களுக்கு வெளியேறினார்.
ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டான கோலி பெவிலியன் திரும்பியபோது, பார்மி ஆர்மி என்றழைக்கப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ரசிகர்கள் பாட்டு பாடி கோலியை வழி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் இப்போது வைரலாகி உள்ளது. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் ஆண்டர்சன் பந்துவீச்சில், 7 முறை கோலி அவுட்டாகி வெளியேறியுள்ளார். இந்த செய்தி, இந்திய ரசிகர்களுக்கு கடுப்பாக இருந்தாலும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
ஆண்டர்சனும் கோலியின் விக்கெட்டை மைதானத்தில் கொண்டாட தொடங்கிவிட்டார். நொந்து போன முகத்துடன் கோலி பெவிலியன் திரும்பி கொண்டிருந்தபோது, பார்மி ஆர்மி ரசிகர்கள் ‘சீரியோ விராட்’ எனப் பாடினார். சீரியோ என்றால் ‘குட்-பை’ என அர்த்தமாம்.
Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!
நேற்றைய தின ஆட்டத்தில், ஏற்கனவே ஆண்டர்சன் பந்துவீச்சில் ராகுலும், புஜாராவும் அவுட்டாகி இருந்தனர். 4-2 என இந்திய அணி தத்தளிக்க அரம்பித்தபோது கேப்டன் கோலியிடம் இருந்து பொறுப்பான ஆட்டத்தை எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், மீண்டும் தனது தவறான ஷாட் செலக்ஷனால் ஆண்டர்சனின் வலையில் சிக்கினார் கோலி. 17 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட கோலி, வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இது இந்திய ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
கடைசியாக, 2019-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்திருந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கோலி சதம் அடிக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், 4 இன்னிங்ஸில் மொத்தம் 69 ரன்கள் அடித்துள்ளார், அதிகபட்சமாக 42 ரன்கள்.
கோலி அவுட்டாவதுதான் வருத்தம் அளிக்கிறது என்றால், ஒரே டிசைனில் அவுட்டாவதுதான் ரசிகர்களை இன்னும் ஏமாற்றம் அடையச் செய்கிறது, கோலியின் மீதான நம்பிக்கையை தகர்த்து வருகிறது. ஒரே டிசைனில், தவறான ஷாட்டால் விக்கெட் கீப்பர் அல்லது ஸ்லிப்பில் இருப்பவர்களிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வருகிறார் கோலி. விரைவில் கம்-பேக்கிற்காக வெயிட்டிங்!
பீச் வாலி பால்... பிரியாணி சேலஞ்ச்....துபாயில் தோனி படை ‛எஞ்சாய் எஞ்சாமி’