டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியா சார்பில் ஃபென்சிங் போட்டியில் பங்கேற்று பவானி தேவி சாதனை படைத்தார். மேலும் டோக்கியோவில் இரண்டாவது சுற்று வரை முன்னேறி அசத்தியிருந்தார். இதன்பின்னர் பவானி தேவிக்கு பல்வேறு நபர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு தற்போது பவானி தேவி மீண்டும் சர்வதேச ஃபென்சிங் போட்டியில் பங்கேற்க தொடங்கியுள்ளார். 


அதன்படி தற்போது அவர் பிரான்சு நாட்டில் நடைபெற்ற சார்லிவில் தேசிய சேபர் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் சிறப்பாக வாள் வீச்சு செய்த பவானி தேவி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். இந்த வெற்றி குறித்து பவானி தேவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பிரான்சு நாட்டில் நடைபெற்ற போட்டியில் நான் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளேன். இந்த வெற்றிக்கு எனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் மற்றும் என்னுடைய குழு ஆகிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. இது இந்த விளையாட்டு சீசனிற்கு ஒரு நல்ல தொடக்கமாக அமையும்" எனப் பதிவிட்டுள்ளார்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி சேபர் பிரிவு ஃபென்சிங் போட்டியில் பங்கேற்று வருகிறார்.


 






சேபர் பிரிவு ஃபென்சிங்: 


சேபர் ஃபென்சிங் பிரிவில் எதிராளியின் மேல் உடம்பு பகுதியில் தொட்டால் மட்டுமே புள்ளிகள் வழங்கப்படும். அதுவும் கைகளில் தொட்டால் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது. இதனால் சேபர் ஃபென்சிங் புள்ளிகளை பெற வேண்டும் என்றால் ஒருவர் மிகவும் வேகமாகவும் துடிப்புடனும் இருக்கவேண்டும். இந்தப் பிரிவு ஃபென்சிங் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பவானி தேவி ஒலிம்பிக் போட்டி வரை தகுதி பெற்று சாதனைப் படைத்திருந்தார். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: கோலி டூ ரோகித் சர்மா-டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக அரைசதம் கடந்த வீரர்கள் !