ஆபீஸ் போறீங்களா, வீட்ல இருக்கீங்களா, வெளிய விழாக்களுக்கு போறீங்களா, பர்த்டே பார்ட்டியா, இப்படி எல்லாத்துக்கும் தனித்தனியா சருமப் பராமரிப்புக்கான வழிகளும், மேக்கப் ஐடியாக்களும் இருக்கு. இனிமே இது தொடர்பான விஷயங்களைத்தான் நாம தினமும் பாக்கப்போறோம். முன்னாடியெல்லாம் மேக்கப் போடுறவங்க திமிராதான் இருப்பாங்கன்னு ஒரு எண்ணம் இருந்தது. அதுக்கு காரணம் சினிமாக்களும்தான். இப்போ எல்லாரும் தன்னை அழகா வெச்சுக்க, எண்ணை வடியாம ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ண மேக்கப் யூஸ் பண்ணலாம்குறது இயல்பா மாறியிருக்கு.
தினமும் ஒரு Skin Care ஐடியாவையோ, மேக்கப் டிப்பையோ தினமும் பாக்கலாம்.
லிப் பென்சில், லிப்ஸ்டிக் எப்படி யூஸ் பண்ணலாம்னு பாக்கலாம் (Lip Pencil, Lip Stick Trick)
லிப் லைனர் அப்ளை பண்றது, லிப் ஸ்டிக் அப்ளை பண்றதுல்லாம் இரண்டாவது விஷயம். Lip Care-க்கு முதல் விஷயம், உங்க உதடுகள் Dead Skin இல்லாம பாதுகாக்கப்படுதாங்குறதுதான்.
லிப் ஸ்டிக் போட்றோமோ இல்லையோ, தினமும் ஒரு நல்ல க்வாலிட்டியான லிப் பாம் அப்ளை பண்றது முக்கியம். எதுவும் காஸ்ட்லியான ப்ராடக்ட்ஸா இருக்கணும்னு அவசியமில்லை. தினமும், ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பஞ்சில் தோய்த்து உதட்டை சுத்தம் செய்து தூங்குவது அவசியம். அல்லது, ஒரு நல்ல க்வாலிட்டியான லிப் பாம் கூட போதும். உதாரணமா Vaseline அல்லது கோகோ பட்டர் ரக லிப் பாம்கள் பயன்படுத்தலாம்.
இதுவே உங்க உதட்டின் சருமத்தை வெடிப்பில்லாம பராமரிக்க உதவியா இருக்கும்.
அடுத்து லிப் ஸ்டிக், லிப் லைனர் அப்ளிகேஷனுக்கு வரலாம்..
1. முதல் ஸ்டெப், கொஞ்சம் லிப் பாம் பயன்படுத்தி உங்க உதட்டை நல்லா Mositurize பண்ணனும்.
2. கருமை இருந்தாலோ, அல்லது தழும்புகள் இருந்தாலோ Concealer பயன்படுத்தி அதை கொஞ்சம் even கலருக்கு கொண்டுவரணும்.
3. லிப் லைனரால், உங்க உதட்டின் வெளிப்புறத்தை define பண்ணனும்.
4. உதட்டு வரிகள் அல்லது உதட்டுப் பள்ளங்களை லைட்டா, லிப் பென்சிலால தீட்டி fill பண்ணனும்.
5. இப்போ லிப் ஸ்டிக் யூஸ் பண்ணுங்க. நல்ல க்வாலிட்டி லிப்ஸ்டிக்ஸ் நம்ம உதட்டின் சருமத்தைப் பாதுகாக்கும். அதனால ஒரே ஒரு லிப்ஸ்டிக் வாங்கினாலும், நல்ல ப்ராண்டட் லிப்ஸ்டிக்கா வாங்கிடுங்க. இப்போ எல்லாம் முடிஞ்சது. ஒரு டிஸ்ஷ்யூ பேப்பர் எடுத்து லைட்டா ஒத்தி எடுங்க. எக்ஸ்ட்ரா லிப் பாம் இருந்தா, அது குறைஞ்சு perfect ஆகும்.
ட்ரை பண்ணிட்டு, கமெண்ட் பண்ணுங்க.