8 வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி:


சீனாவின் ஹூலுன்பியர் நகரில் 8 வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி  நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா,தென்கொரியா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன.  ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.


நடப்பு சாம்பியனான இந்திய அணி தாங்கள் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஏற்கனவே அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று மோதியது.






இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தானால் கடந்த எட்டு ஆண்டுகளாக வீழ்த்த முடியாத அணியாக இந்தியா உள்ளது. 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானிடம் தோல்வியையே கண்டதில்லை. 



அதன்பின் 17 ஆட்டங்களில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற 15வது வெற்றி இதுவாகும். மீதமுள்ள இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம், நடப்பு ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா  தனது ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.


 


மேலும் படிக்க: IND vs BAN 1st Test:வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்.. மைதானத்திற்கு ரெடியான அஸ்வின்! மனைவி வெளியிட்ட முக்கிய பதிவு


 


மேலும் படிக்க: IPL 2025 Dhoni:பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி.. கோபத்தில் எட்டி உதைத்த தோனி! உண்மையை உடைத்த சிஎஸ்கே வீரர்