இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர்:


அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி தொடரை கைப்பற்றியது. ஆனால் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமான தோல்வியை சந்தித்தது. இச்சூழலில் தான் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.


இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று முன் தினம் சென்னைக்கு வந்தனர். அந்தவகையில் தற்போது வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்காளதேச அணி, முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, செப்டம்பர் 15-ம் தேதி சென்னைக்கு வர உள்ளது.  சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 23-ம் தேதி முடிவடைந்ததும், கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. 



இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் மனைவி பிரித்தி நாராயணன் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை, டெஸ்ட் போட்டி உணர்வுகள் வருகிறது. சரியா?"என்று கூறியுள்ளார். இதில் அஸ்வின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானம் அஸ்வின் ஹோம் கிரவுண்ட் என்பதால் மகிழ்ச்சியுடன் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதை அஸ்வினும் பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்திய டெஸ்ட் அணி:


ரோஹித் ஷர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.


வங்கதேச டெஸ்ட் அணி:


நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன் , ஷத்மான் இஸ்லாம் , மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம் , நயீம் ஹசன், நஹித் ரனா, ஹசன் மஹ்முத் ரனா தஸ்கின் அகமது , சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி அனிக்