இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.


முன்னதாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி இடம்பெறவில்லை. என்ன காரணத்துக்காக விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை என்பது தெரியவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக என்று மட்டுமே சொல்லப்பட்டு வந்தது. தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், "கோலி - அனுஷ்கா தம்பதியினர் இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகின்றனர்" என்று தகவல் கூறினார்.


13 ஆண்டுகளில் இதுவே முதல்முறை:


இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளதுவிராட் கோலியின் முடிவை வாரியம் முழுமையாக மதித்து ஆதரிக்கிறதாகவும் அதில் தெரிவித்திருந்தது. குறிப்பாக கடந்த 13 ஆண்டுகளில் உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாடாமல் விராட் கோலி முழுமையாக வெளியேறியிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.


கடந்த 2011 ஆம் ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான விராட் கோலி இதுவரையிலும் உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு முறைகூட விளையாடாமல் இருந்ததில்லை. அதன்படி, விராட் கோலி இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் 191 இன்னிங்ஸ்களில் 49.15 சராசரியுடன் 8848 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், 29 சதம் மற்றும் 30 அரைசதம் விளாசியிருக்கிறார் கோலி.


முன்னதாக, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதியும்,  நான்காவது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தரம்ஷாலாவில் தொடங்குகிறது. 


மேலும் படிக்க: IND vs AUS U19 Final: சீனியர்ஸ்களுக்காக பழி தீர்ப்பார்களாக ஜூனியர்ஸ்! உலகக்கோப்பையை வெல்லுமா இந்தியா?


மேலும் படிக்க: Shreyas Iyer: இந்திய அணிக்கு அடுத்த தலைவலி! ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம்? அடுத்த போட்டியில் விளையாடுவாரா?