பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு  முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  வரும் 20ம் தேதி கொடியேற்றமும், 28ம் தேதி மாசித்தேரோட்டமும் நடைபெறுகிறது.


Virat Kohli: தனிப்பட்ட காரணம்.. இங்கிலாந்து தொடரில் இருந்து முழுமையாக விலகிய விராட் கோலி - இந்திய அணி அறிவிப்பு!




திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர மக்களின் பிரதானமாக கோயிலாக வழிபடப்படுவது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகும். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் முக்கிய உபகோயிலான இக்கோயிலில் மாசித்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  இத்திருவிழா  முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது.


Box office Collections: மாஸ் காட்டியது லால் சலாமா? லவ்வரா? - முதல் நாள் வசூல் நிலவரம் இதோ!




இரவு கோயில் வளாகம் அருகே நடப்பட்ட முகூர்த்தக்கம்பத்துக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. முகூர்த்தக்காலுக்கு வேண்டிய புண்யாவாஜன பொருட்கள் இடப்பட்டதும் தீபாராதனை நடைபெற்றது.  வரும் பிப்.13 ம் தேதி மாலை அரிவாள் எடுத்துக் கொடுத்தலும், இரவு 8 மணியளவில் திருக்கம்பம் அலங்கரித்தல் மற்றும் கம்பம் சாட்டுதலும் நடைபெறவுள்ளது.


Actress Santhoshi: இலங்கையில் சாப்பாட்டால் அசிங்கப்பட்ட சீரியல் நடிகை - செம அப்செட்டில் இந்தியா ரிட்டர்ன்




விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் பிப்.20ம் தேதி இரவு 7.45 மணிக்கு நடைபெறுகிறது. கொடியேற்றம் துவங்கியது முதல் 10 நாட்களுக்கும் அருள்மிகு மாரியம்மன் தங்கமயில், புதுச்சேரி சப்பரம், சிம்மவாகனம், தங்கக்குதிரை, வெள்ளியானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு இரதவீதி உலா எழுந்தருள்கிறார்.  பிப்.27ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், பிப்.28ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தலும் நடைபெறுகிறது.