டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் சுவாரஸ்யமாக தொடங்கியுள்ளது. பி க்ரூப்பில் இடம் பிடித்திருக்கும் அணிகளில், முதல் இரண்டு இடத்தை பிடிக்க வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்விகளை தழுவியிருக்கும் பப்புவா நியூ கினியா தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
இந்நிலையில், நேற்று ஸ்காட்லாந்து - பப்புவா நியூ கினியா அணிகள் மோதிய போட்டியில் ஸ்காட்லாந்து வீரர் ரிச்சி பேரிங்டன் அடித்த சிக்சர் வைரலாகி வருகின்றது. அல் அமீரக் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் களமிறங்கிய ஸ்காட்லாந்து ஓப்பனர்கள் சொதப்ப, ஒன் டவுன் களமிறங்கிய மேத்யூ கிராஸூம் (45), அடுத்து களமிறங்கிய ரிச்சி பேரிங்டனும் (70) அணியை மீட்டனர்.
முதல் இன்னிங்ஸின் ஏழாவது ஓவரில், ரிச்சி அடித்த சிக்சர் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. 49 பந்துகளில் 70 ரன்கள் அடித்த அவர் இந்த சீசனின், உயரமான சிக்சரை பதிவு செய்துள்ளார். 97 மீட்டர் தூரத்தில் பறந்த அந்த சிக்சர் ஸ்காட்லாந்து கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, டி-20 உலகக்க்கோப்பையில் அரை சதம் அடித்த முதல் ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ரிச்சி.
Also Read: T20 உலகக் கோப்பை ஜெர்சியை யாரு வடிவமைக்கிறாங்க தெரியுமா? ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்..!
ரிச்சியின் சிக்சர்:
முதல் இன்னிங்ஸ் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது ஸ்காட்லாந்து அணி. கடினமான இலக்கை சேஸ் செய்த பப்புவா நியூ கினியா டஃப் கொடுத்தது. 19.3 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்த அந்த அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இரண்டாவது இன்னிங்ஸில், ஸ்காட்லாந்து வீரர் ரிச்சி பிடித்த கேட்சும் கிரிக்கெட் வட்டாரத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸின் ஆறாவது ஓவரில், டேவி வீசிய பந்தை தூக்கி அடித்தார் பேட்டர் சைமன், அதை ஒற்றை கையில், அதுவும் இடது கையில் கவ்வி அசத்தல் பர்ஃபாமன்சை பதிவு செய்தார் ரிச்சி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்