டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளும், பயிற்சி ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில், அல் அமீரட் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் வங்கதேசம் - ஓமன் அணிகள் மோதின. அடுத்த சுற்றுக்கு முன்னேற கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் களமிறங்கிய வங்கதேசம், போராடி போட்டியை வென்றுள்ளது. 2021 டி-20 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு இது முதல் வெற்றி!


தகுதிச்சுற்றில் விளையாடும் ஏ, பி க்ரூப்களில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெறும். வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா அணிகள் இருக்கும் க்ரூப்பில் ஸ்காட்லாந்து விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை தழுவியது. பப்புவா நியூ கினியா இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இதனால், இரண்டாவது இடத்துக்கு ஓமன், வங்கதேச அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 


Also Read: ஏபிடி, கோலி டூ கெயில்.. டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் விளாசிய அதிரடி மன்னர்கள் யார்?






சொந்த மண்ணில் விளையாடும் ஓமன் அணி, முதல் போட்டியை வெற்றியை ஈட்டி இருந்ததால், நேற்றைய போட்டி வங்கதேச அணிக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்திருந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங் களமிறங்கியது.  ஓப்பனிங் பேட்டர் முகமது நயிம் (64), ஷாகிப் அல் ஹசன் (42) தவிர மற்ற பேட்டர்கள் சொர்ப்ப ரன்களுக்கு வெளியேறினர். இதனால், 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது வங்கதேச அணி. ஓமன் அணியைப் பொருத்தவரை, பிலால் கான், ஃபயஸ் பட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கலீமுல்லா இரண்டு விக்கெட்டுகளும், சீசான் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.






வங்கதேசத்தை போல, ஓமன் அணிக்கும் இந்த போட்டியில் கட்டாய வெற்றி தேவை என்பதால், முடிந்த வரை டஃப் கொடுத்தனர் ஓமன் பேட்டர்கள். பப்புவா நியூ கினியா போட்டியில் அதிரடி காட்டிய அதே ஓப்பனர், பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட ஜதிந்தர் சிங்தான் ஓமன் அணிக்கு ரன் சேர்த்தார். அவர் 40 ரன்கள் எடுத்து அவுட்டாக, மற்ற பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேறினர். ஒன் டவுன் களமிறங்கிய கஷ்யப் பிரஜபத்தி (21) குஜராத்தில் பிறந்தவர். அவர் ஓரளவு ரன் சேர்த்தும் ஓமன் அணியால் வெற்றியை ஈட்ட முடியவில்லை. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது ஓமன் அணி. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை வங்கதேச அணி தக்க வைத்து கொண்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண