இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஐபிஎல் இரண்டாவது பாதிக்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக அனைத்து அணிகளும் தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். குறிப்பாக சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா,ஷர்தல் தாகூர், மொயின் அலி உள்ளிட்ட வீரர்கள் இன்று துபாய் சென்றடைந்தனர். இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் சென்னை அணி நடப்புச் சாம்பியன் மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது. 


இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சூப்பர் கபுல்ஸ் என்ற புதிய வீடியோ தொடரை இன்று ஆரம்பித்துள்ளது. அதில் முதலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சின்ன தல ரெய்னாவும் அவருடைய மனைவி பிரியங்காவும் பங்கேற்றுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பிரியங்கா மற்றும் ரெய்னா ஆகிய இருவர் தொடர்பாக கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கு இவரும் மாறி மாறி பதிலளிக்கின்றனர். அந்த வீடியோவில் தம்பதிகள் தொடர்பான கேள்விகள் மற்றும் அவர்களின் விருப்பம் தொடர்பான கேள்விகள் கேட்கும் வகையில் அமைந்துள்ளது. 


 






அதில் குறிப்பாக முதலில் ரெய்னா பிரியங்காவை தன்னுடைய பள்ளி பருவத்தில் வீட்டில் பார்த்துள்ளார். அதன்பின்னர் 2008ஆம் ஆண்டு அவரை ஒரு விமான நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து உள்ளிட்டவற்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவர்கள் இருவரில் யார் ரியால்டி ஷோவில் பங்கேற்பார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரியங்கா, "நிச்சயம் சுரேஷ் ரெய்னா தான் பங்கேற்பார்" எனக் கூறினார். அதைத் தொடர்ந்து உடனே ரெய்னா, "நான் நிச்சயம் ரியால்டி ஷோ என்றால் தென்னிந்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பேன். வேறு மொழி நிகழ்ச்சி என்பதால் நன்றாக இருக்கும். மேலும் நான் அதை பார்த்துள்ளேன்" எனக் கூறினார். 


அதன்பின்னர் ரெய்னாவிற்கு பிடித்த நடிகர் யார் என்று அவருடைய மனைவி பிரியங்காவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் உடனடியாக யோசிக்காமல்  நடிகர் சூர்யா தான்  அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று கூறினார். இதேபோன்று பல்வேறு கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதிலளித்துள்ளனர். இந்த வீடியோவிற்கான கமெண்ட்ஸில் ரசிகர்கள் அடுத்த வீடியோவில் தல தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்‌ஷி ஆகியோரின் நேர்காணலை போடுங்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க:என் பல்லு விழுந்ததுக்கும் ஐ.பி.எல். காரணமா? - ட்விட்டரில் கலாய்த்த இர்ஃபான் பதான்