ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ள 2023 FIFA மகளிர் உலகக் கோப்பையை நடத்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தயாராகி வருகிறது. பெண்கள் கால்பந்து உலகக் கோப்பையின் ஒன்பதாவது பதிப்பை இரண்டு நாடுகள் கூட்டாக நடத்துவதன் மூலம் புதிய கலாச்சாரத்தை உருவாக்குகிறது. முந்தைய பதிப்புகளை ஒப்பிடுகையில், இம்முறை அதிக அணிகள் பங்கேற்கின்றன. முன்னர் 24 அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது 32 அணிகள் போட்டியிடுவதால், போட்டிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


2019-ம் ஆண்டு பிரான்சில் நடந்த போட்டியிலும், 2015-ம் ஆண்டு கனடாவில் நடந்த போட்டியிலும் வெற்றி பெற்று, ஹாட்ரிக் கோப்பையை வெல்ல காத்திருக்கிறது அமெரிக்கா. இதனால் யுஎஸ்ஏ பெண்கள் கால்பந்தின் அதிகார மையமாகத் தொடர்கிறது. ஆனால் இம்முறை அணியில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன, ஒப்பீட்டளவில் அனுபவம் குறைந்த அணியாக களம் காண்பது, மற்ற அணிகளுக்கு வாய்ப்புகளைப் பெற அனுமதிக்கும் என்று தெரிகிறது.



உலகக் கோப்பை மைதானங்கள்


ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முழுவதும் உள்ள, ஒன்பது வெவ்வேறு நகரங்களில் அமைந்துள்ள 10 மைதானங்கள் போட்டிகளுக்கான இடங்களாக செயல்படும். இந்த நகரங்களில், சிட்னியில் மட்டும் இரண்டு இடங்களில் போட்டிகளை நடத்தப் படுகிறது. சிட்னி கால்பந்து ஸ்டேடியம் மற்றும் ஸ்டேடியம் ஆஸ்திரேலியா என்ற இரண்டு மைதானங்கள் அங்கு உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், ஸ்டேடியம் ஆஸ்திரேலியா ஆகஸ்ட் 20 அன்று இறுதிப் போட்டிக்காக தயாராகி வரும் தளமாகும்.


தொடர்புடைய செய்திகள்: Oommen Chandy Passes Away: அதிகாலையில் சோகம்.. முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்.. கேரளா காங்கிரஸ் அறிவிப்பு


அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை?


பங்கேற்கும் 32 நாடுகளுக்கான மொத்த பரிசுத் தொகை $110 மில்லியன் ஆகும், இது முந்தைய பதிப்பை விட மூன்று மடங்கு அதிகம். கத்தாரில் நடைபெற்ற ஆண்கள் போட்டியில் மொத்த பர்ஸ் $440 மில்லியன் ஆகும். FIFA கோப்பையை வெல்லும் அணிக்கு $10.5 மில்லியன் வழங்கப்படும். அதில் $6.21 மில்லியன் வீரர்களுக்கும், $4.29 மில்லியன் கூட்டமைப்புக்கும் வழங்கப்படும்.



இந்தியாவில் 2023 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையை எதில் பார்க்கலாம்?


FanCode மொபைல் ஆப்- இல் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது. இதனை Android, iOS, TV யில் அணுகலாம். ஆண்ட்ராய்டு டிவியில் கிடைக்கும் டிவி ஆப்ஸ், Amazon Fire TV Stick, Jio STB, Samsung TV, Airtel XStream, OTT Play மற்றும் www.fancode.com ஆகியவற்றின் மூலம் ரசிகர்கள் அனைத்து போட்டிகளையும் காண முடியும். இந்தியாவில் உள்ள கால்பந்து ஆர்வலர்கள் பரபரப்பான லைவ் ஆக்‌ஷன் மட்டுமின்றி, போட்டி முழுவதிலும் உள்ள பிரத்யேக மேட்ச் ஹைலைட்ஸ் மற்றும் கிளிப்களையும் கூட இதே தளத்தில் பார்க்க முடியும்.