இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்கிற நிலையில் அனைவரின் கண்களும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை நோக்கி திரும்பியுள்ளது.லண்டன் லார்ட்ஸில் நடைப்பெறும் இந்த போட்டியில் இந்திய அணி ரெக்கார்ட் எப்படி உள்ளது என்பதை காணலாம்.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா:
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி என்பது சற்று கலவையாக உள்ளது. இது வரை இந்திய அணி அங்கு 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, 12 போட்டிகளில் தோல்வியும் 4 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளது.
ஆனால் என்னத்தான் புள்ளிவிவரங்கள் இந்திய அணிக்கு எதிராக இருந்தாலும் கடைசியாக இங்கு விளையாடிய மூன்று போட்டிகளில் இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
கடைசி மூன்று போட்டி முடிவுகள்
2014 ஆம் ஆண்டு, எம்.எஸ். தோனியின் தலைமையில், இந்தியா இங்கிலாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.2018 ஆம் ஆண்டில், விராட் கோலி தலைமையில் அந்த அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டில், வலுவான ஆல்ரவுண்ட் செயல்திறனை வெளிப்படுத்தி, இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற்றது
பிட்சில் மாற்றம்?
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தங்கள் சொந்த ரசிகர்கள் மத்தியில் ஆடிய இங்கிலாந்து, எதிர்பார்த்த மாதிரியான முடிவு அந்த அணிக்கு கிடைக்கவில்லை! பலம் வாய்ந்த அணியாக இருந்தபோதிலும், இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சும், ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் உட்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா அந்த போட்டியில் வெற்றி பெற்றது.
முதலிரு டெஸ்ட் போட்டிகளில் சராசரி பிட்ச்களுக்குப் பிறகு, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச் தயாரிக்கப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேருவதால் பந்து வீச்சில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:
பென் டக்கெட், ஜாக் கிராலி, ஓலி போப், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (கீப்பர்), ஜேமி ஓவர்டன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர், சாம் குக், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர்.