2022 FIFA உலகக் கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தனது அணி தோல்வியடைந்ததை அடுத்து ஈரான் மேலாளர் கார்லோஸ் குய்ரோஸ் தனது அணி வீரர்களை விமர்சித்த ரசிகர்களை கடுமையாக சாடியுள்ளார். 


ரசிகர்களை வீட்டிற்கு போக சொன்ன பயிற்சியாளர்


பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு கோல்களை அடித்ததால், கலீஃபா சர்வதேச மைதானத்தில் இங்கிலாந்து எளிதில் வென்றது. ஈரான் 6-2 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. விளையாட்டு தொடங்கும் முன், ஈரானிய வீரர்கள் தங்கள் நாட்டில் நடந்து வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக தேசிய கீதத்தின் போது இணைந்து பாட மறுத்தனர்.


பல ஈரானிய ஆதரவாளர்கள் தேசிய கீதத்திற்கு எதிராக ஏளனமாக கூச்சலிட்டனர். இருப்பினும், சில ரசிகர்கள் தங்கள் தேசிய கீதத்தை பாடாததற்காக வீரர்களை விமர்சித்தனர். இதனை கவனித்த ஈரானின் தலைமை பயிற்சியாளர் குய்ரோஸ் FIFA உலகக் கோப்பையில் அணிக்கு ஆதரவளிக்க விரும்பாத ரசிகர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். 



வீரர்களின் சூழ்நிலை


“கடந்த சில நாட்களாக இந்த வீரர்கள் எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க மாட்டீர்கள். மேலும் அவர்கள் கால்பந்து விளையாட விரும்புவதால், எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும், அவர்களைக் கொல்லவே நினைக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், நீங்கள் எதைச் செய்தாலும், சொன்னாலும், நினைத்தாலும் நீங்கள் கொல்லப்படுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் விளையாட வேண்டும் என்ற ஒரே ஒரு நம்பிக்கைதான் அவர்களுக்கு உள்ளது’’, என்றார்.


தொடர்புடைய செய்திகள்: Chennai Snow: ஊட்டியாக மாறிய சென்னை..! திடீரென வீசும் கடும் குளிருக்கு காரணம் என்ன..?


ரசிகர்கள் ஆதரவு இல்லை


மேலும், "வீரர்கள் செய்ததைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன், ஆனால் 2014 மற்றும் 2018 இல் எங்களுக்கு ரசிகர்களின் முழு ஆதரவு இருந்தது. இப்போது என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள், அணிக்கு ஆதரவளிக்கத் தயாராக இல்லாத ரசிகர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்," என்றார். FIFA உலகக் கோப்பை மோதலில் இங்கிலாந்துக்கு எதிராக 6-2 என்ற கணக்கில் தோல்வியடைந்ததில் வீரர்கள் திசைதிருப்பப்பட்டதாக ஈரான் பயிற்சியாளர் கூறுகிறார்.



கவனம் செலுத்தும் சூழல் இல்லை


மேலும் பயிற்சியாளர் கூறுகையில், தனது வீரர்கள் தங்கள் சொந்த நாட்டில் நடந்து வரும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக தற்போது சிறந்த சூழலில் இல்லை என்று கூறினார். "எனது கருத்து கவனச்சிதறல்களைப் பற்றியது. எனது வீரர்களின் தற்போதைய சூழ்நிலைகள் கவனம் செலுத்துவதற்கு உகந்ததாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும், ஏனெனில் அவர்கள் பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விளையாடுவது மக்களுக்காக மட்டுமே. நான் அவர்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன், அவர்கள் எழுந்து நின்று சண்டையிடும் விதம். அவர்கள் செய்ததைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்றார். எச் பிரிவில் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் ஈரான் உள்ளது. அவர்கள் தற்போது தங்கள் குரூப்பின் அட்டவணையில் கடைசியாக உள்ளனர்.