கிரிக்கெட் போட்டியை காட்டிலும் பல மடங்கு ரசிகர்களை கொண்ட போட்டி கால்பந்து ஆகும். ஆண்கள் கால்பந்து, பெண்கள் கால்பந்து என்று எந்த போட்டியானாலும் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள்.  ஆண்கள் உலகக்கோப்பை கால்பந்தை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கைப்பற்றிய நிலையில், பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது.


இந்த நிலையில், இந்த தொடரின் இறுதிக்கட்டமாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. சிட்னியில் உள்ள மைதானத்தில் இங்கிலாந்து – ஸ்பெயின் அணிகள் மகுடத்திற்காக மோதி வருகின்றனர்.


களத்தில் இறங்கியது முதல் இரு அணிகளும் கோல் அடிப்பதற்காக மாறி, மாறி ஆடினர். இதில் கோல் வளையத்திற்கு செல்வதும் பின்னர் கோல் அடிக்கப்படாமல் இருப்பதுமே இருந்து வந்தது. இந்த நிலையில், இங்கிலாந்து வீராங்கனைகள் மைதானத்தின் நடுவில் பந்தை தவறவிட, அதை இங்கிலாந்தின் கோல் வளையத்திற்கு அனுப்ப, அங்கே நின்றிருந்த ஸ்பெயின் கேப்டன் ஓல்கா கார்மோனா அதை அற்புதமாக கோலாக மாற்றினார்.


ஆட்டத்தில் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் தன்னுடைய முதல் கோலை அடித்தது. ஸ்பெயின் கோல் அடித்த பிறகு இங்கிலாந்து வீராங்கனைகள் ஸ்பெயினின் கோல் வளையத்தை முற்றுகையிட முயற்சித்தனர். ஸ்பெயின் வீராங்கனைகள் தடுப்பு ஆட்டத்தை ஆடினாலும், இங்கிலாந்து வீராங்கனைகள் பந்தை கோலாக்க முயற்சித்தனர். ஆனால், கிடைத்த பொன்னான ஒரு வாய்ப்பை இங்கிலாந்து வீராங்கனை தவறவிட்டார். அதேசமயம் முதல் பாதி முடிவடைய ஒரு நிமிடம் இருக்கும்போது ஸ்பெயினுக்கு மற்றொரு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


ஆனால், ஸ்பெயின் வீராங்கனை அடித்த பந்து கோல்வளையத்தில் பட்டு வெளியே சென்றுவிட்டது. தற்போது வரை முதல் பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1 கோல் அடித்து முன்னிலையில் உள்ளது. இரண்டாம் பாதியில் இங்கிலாந்து அணி தாக்குதல் ஆட்டத்தை நடத்தும் என்பதால் இரண்டாம் பாதியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.


மேலும் படிக்க:NZ vs UAE T20: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நியூசி. அணியை முதன் முறையாக தோற்கடித்த UAE… சமனான தொடரில் கடைசி டி20 போட்டி இன்று!


மேலும் படிக்க: Mohammed Naim: ஆசியக்கோப்பை போட்டிக்கு முன்பாக தீ மிதித்த வங்கதேச வீரர்… ஏன்? வைரலாகும் வீடியோ!