ஆசிய கோப்பையின் 2023 நெருங்கி வரும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் வீரர் முகமது நைம் தனது பயிற்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
தீ மிதித்த வங்கதேச வீரர்
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் ஒரு வீடியோவில், வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் நைம் தீ மிதிப்பதை காணமுடிகிறது. 2023 ஆசியக் கோப்பைக்கு முன்னதாக தனது மன உறுதியை மேம்படுத்துவதற்காக இதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 23 வயதான அவர் ஒரு மைண்ட் ட்ரெயினர் மூலம் இதனை செய்ததாக தெரிகிறது. இந்த வீடியோ X சமூக வலைதள பயனர் சைஃப் அகமது என்பவரின் மூலம் பகிரப்பட்டுள்ளது. அவர் @BanglaTigers_ae மற்றும் @RangpurRiders அணிகளின் சமூக ஊடக மேனேஜர் என்று அவரது புரோஃபைலில் குறிப்பிட்டுள்ளார்.
நைமின் ஃபார்ம்
நைம் இந்த ஆண்டு மார்ச் மாதம் பங்களாதேஷிற்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இதுவரை நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது சாதனை மிகவும் மோசமாக இருந்தாலும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) 2023 ஆசிய கோப்பைக்கான தொடக்க ஆட்டக்கார்களில் முதல் ஆளாக தங்கள் அணியில் பெயரிட்டது. மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் ஆசியக்கோப்பை தொடரில் இருந்து மிளிர்வார் என்று அணி எதிர்பார்க்கிறது.
ஆசியக்கோப்பையில் முதல் போட்டி
ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனான இலங்கைக்கு எதிரான போட்டியுடன் ஆகஸ்ட் 31 அன்று கண்டியில் தனது முதல் போட்டியில் வங்கதேச அணி ஆட உள்ளது. இந்திய அணி 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது தொடரை தொடங்கவுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டியில் நடைபெறவுள்ளது. 2023 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி நாளை (ஆகஸ்ட் 21ஆம் தேதி) தேர்வு செய்யப்பட உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆசிய கோப்பை 2023 முழு அட்டவணை
ஆகஸ்ட் 30: பாகிஸ்தான் vs நேபாளம் - முல்தான்
ஆகஸ்ட் 31: பங்களாதேஷ் vs இலங்கை - கண்டி
செப்டம்பர் 2: பாகிஸ்தான் vs இந்தியா - கண்டி
செப்டம்பர் 3: பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் - லாகூர்
செப்டம்பர் 4: இந்தியா vs நேபாளம் - கண்டி
செப்டம்பர் 5: ஆப்கானிஸ்தான் vs இலங்கை - லாகூர்
சூப்பர் 4
செப்டம்பர் 6: A1 vs B2 - லாகூர்
செப்டம்பர் 9: B1 vs B2 - கொழும்பு
செப்டம்பர் 10: A1 vs A2 - கொழும்பு
செப்டம்பர் 12: A2 vs B1 - கொழும்பு
செப்டம்பர் 14: A1 vs B1 - கொழும்பு
செப்டம்பர் 15: A2 vs B2 - கொழும்பு
செப்டம்பர் 17: இறுதி - கொழும்பு