2023- 2024 ம் ஆண்டிற்கான ஐரோப்பிய தொடரை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றி உள்ள சூழலில் 2024- 2025ம் ஆண்டிற்கான ஐரோப்பிய கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காக கிலியன் எம்பாப்பே விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
ரியல் மாட்ரிட் கிளப்பில் இணையும் எம்பாப்பே:
2023- 2024 ம் ஆண்டிற்கான ஐரோப்பிய தொடரில் மற்றொரு கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கிளப்பிற்காக விளையாடிய கிலியன் எம்பாப்பே அடுத்த வருடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஒரு புறம் தங்களது கிளப்பிற்காக கிலியன் எம்பாப்பே விளையாடுவார் என்பதால் ரியல் மாட்ரிட் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் பிரான்ஸ் ரசிகர்களுக்கு இது சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதேபோல் ரியல் மாட்ரிட் அணியில் இணையும் எம்பாப்பே 2029 ஆம் ஆண்டு வரை அந்த கிளப்பிற்காக விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
கால்பந்து அரக்கன்:
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டியான அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அதையும் தாண்டி இறுதிப் போட்டியில் அடுத்தடுத்து ஹாட்ரிக் கோல்கள் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் கிலியன் எம்பாப்பே. பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில் டிசம்பர் 20 ஆம் தேதி 1998 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் எம்பாப்பே.
இவருடைய இயற்பெயர் கிலியன் எம்பாப்பே லொட்டின் . இவருடைய தந்தை கால்பந்து பயிற்சியாளர். தாயார் கைப்பந்து வீராங்கை. இவருடைய குடும்பமே விளையாட்டை அடிப்படியாக கொண்டது தான்.
பிரான்ஸ் அணியின் பார்வார்டு டிபெண்டர். 6 வயதிலேயே தந்தையின் கால்பந்து அகாடமியில் சேர்ந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மொனாக்கோ கால்பந்து கிளப்பில் சேர்ந்தார். அங்கு லிகு ஒன் தொடரில் பட்டத்தை வென்றார். பிரான்சு அணிக்காக அதிக சம்பளம் பெரும் ஒரே கால்பாந்து வீரரும் இவர் தான்.
இவர் ஒரு போட்டிக்கு வாங்கும் சம்பளம் 185 மில்லியன் டாலர். இப்படி இருக்கும் சூழலில் தான் எம்பாப்பே தற்போது ரியல் மாட்ரிட் கிளப்பில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கிலியன் எம்பாப்பே பெரும் தொகைக்கு தான் ரியல் மாட்ரிட் அணி வாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ICC ODI Player: 2023-ம் ஆண்டின் சிறந்த வீரர் விருது..4 வது முறையாக விராட் கோலி சாதனை!
மேலும் படிக்க: T20 World Cup: ரசிகர்களே உணர்ச்சிவசப்படாதீங்க.. கிரிக்கெட் மைதானத்திற்குள் துப்பாக்கியுடன் களம் இறங்கும் போலீஸ்!