நியூயார்க்கில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் போலீஸ் துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.


ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024:



ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி. இதில் முதல் போட்டியில் கனடா அணியை வீழ்த்தி தங்களது வெற்றிக்கணக்கை தொடங்கியது அமெரிக்கா. இச்சூழலில் இன்று (ஜூன் 3) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா விளையாட உள்ளது. 


மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்:



முன்னதாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியின் போது ரோஹித் ஷர்மா மீதுள்ள அன்பால் ரசிகர்கள் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்தார். இந்தியாவில் இது போன்ற செயல்பாடுகள் நடைபெற்றால் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நபர்களை கண்டித்து அனுப்பி விடுவார்கள்.


ஆனால் அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு வீரர்கள் கையில் விலங்கிட்டு அந்த நபரை அழைத்துச்சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியானது. அதேநேரம் ரோஹித் ஷர்மா அந்த வாலிபரை விட்டு விடும் படி பாதுகாப்பு வீரர்களிடன் கூறியிருந்தார். 


களம் இறங்கிய துப்பாக்கி சுடும் வீரர்கள்:


இந்நிலையில் தான் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகள் விளையாடும் இன்றைய போட்டியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நியூயார்க்கில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் போலீஸ் துப்பாக்கி சுடும் வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.


அந்தவகையில், ஜூன் 3-12 க்கு இடையில் லாங் ஐலேண்ட் மைதானத்தில் நடைபெறும் விளையாட்டுகள் எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடைபெறுவதை உறுதிசெய்ய நசாவ் கவுண்டி காவல் துறை ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதேபோல் மைதானத்திற்குள் சாதாரண உடைகளில் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 






இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “டி20 உலகக் கோப்பையில் உள்ள அனைவரின் பாதுகாப்பும் எங்கள் முதல் முன்னுரிமையாகும், மேலும் நாங்கள் ஒரு விரிவான மற்றும் வலுவான பாதுகாப்புத் திட்டத்தை வைத்திருக்கிறோம். எங்கள் ஹோஸ்ட் நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுகிறோம், மேலும் எங்கள் நிகழ்வுக்கு அடையாளம் காணப்பட்ட ஏதேனும் அபாயங்களைக் குறைக்க பொருத்தமான திட்டங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்த பாதுகாப்பை வலுபடுத்தி உள்ளோம்” என்று கூறியுள்ளது. 


மேலும் படிக்க: SL vs SA T20 World Cup 2024: தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக கடைசி வெற்றி 2018-ல்.. டி20 உலகக் கோப்பையில் இன்று இலங்கை என்ன செய்யும்..?


 


மேலும் படிக்க: Watch Video: டி20 உலகக் கோப்பையில் 2 முறை முதல் ஓவரில் முதல் விக்கெட்.. அசத்திய நமீபிய பவுலர் ட்ரம்பெல்மேன்..!