FIFA World Cup 2022: 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை கத்தாரில் நடைபெறவுள்ளது. 


முதல் ஆட்டத்தில் கத்தாரும், ஈக்குவடாரும் மோதுகின்றன.  உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தாரை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். உலகம் முழுவதும் பெரும்பாலான ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டாக கால்பந்து கருதப்படுகிறது. ஒலிம்பிக்கில் கால்பந்து விளையாட்டும் இருந்தாலும், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா) நடத்தும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு எப்போதும் மவுசு அதிகம்.


இதுவரை 21 முறை உலகக் கோப்பை கால்பந்து தொடர் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளது. அவற்றில் முக்கியமான மறக்க முடியாத ஆட்டங்களைப் பார்ப்போம். காலவரிசையின்படி மறக்க முடியாத ஆட்டங்களின் பட்டியலைப் பார்ப்போம்.


பிரேசிலை வீழ்த்திய உருகுவே 


1950 ஆம் ஆண்டின் கால்பந்து வடிவம் சற்று வித்தியாசமாக இருந்தது. நான்கு குழுக்களின் வெற்றியாளர்கள் வெற்றியாளரைத் தீர்மானிக்க மற்றொரு குழு நிலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
ஒரே ஒரு டிரா செய்தால் பிரேசில் வெற்றி பெற்றுவிடும். அப்போது ஸ்வீடன், ஸ்பெயின் அணிகளை முறையே 7-1, 6-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியிருந்தது.


பெரும்பாலான அச்சு ஊடகங்கள் பிரேசில் தான் வெற்றி பெற்றது என்று செய்தித்தாளில் ஏற்கனவே செய்தியை அச்சடித்து தயார் செய்து விட்டன.  ஃபைனலில் முதல் பாதி ஆட்டத்தில் பிரேசில் அணி ஒரு கோலைப் பதிவு செய்தது. எனினும், கடைசி 25 நிமிடங்களில் உருகுவே அணியின் வீரர் ஜூவான் ஆல்பர்டோ பேக் டூ பேக் கோல் பதிவு செய்து அசத்தினார்.


சுமார் 2 லட்சம் பார்வையாளர்களுடன் நிரம்பியிருந்த அரங்கம் அமர்க்களமானது. இதில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது முறையாக உருகுவே அணி சாம்பியன் பட்டம் வென்றது. 1930ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை உருகுவே வென்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது உலகக் கோப்பையை அந்த அணி கைப்பற்றிய இந்த ஆட்டமும் வரலாற்றில் பதிவாகியது.


முதல் முறையாக இங்கிலாந்து சாம்பியன்


1966ஆம் ஆண்டு  இங்கிலாந்தில் நடைபெற்ற உலக் கோப்பைத் தொடரில் அந்நாட்டு அணியே சாம்பியன் ஆனது. பைனலில் ஜெர்மனியும் இங்கிலாந்தும் மோதின. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கொடுப்பதற்கான வடிவமைக்கப்பட்ட கோப்பையே திருடுப்போன அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. பின்னர் அந்த கோப்பையை  மோப்ப நாய் தேடிக் கண்டுபிடித்தது தனிக்கதை.




பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. கோப்பையே திருடுபோன இந்த ஆட்டமும் கால்பந்து ரசிகர்களின் மத்தியில் மறக்க முடியாத ஆட்டமாகத் திகழ்கிறது.



இங்கிலாந்து-பிரேசில் ஆட்டம் -- ஆண்டு 1970


1970 உலகக் கோப்பைத் தொடரில் அப்போது நடப்பு சாம்பியனாக இருந்த இங்கிலாந்தை ஓர் ஆட்டத்தில் பிரேசில் எதிர்கொண்டது.  பிரேசில் அணியில் பீலே, ஜெய்ர்ஜின்ஹோ, ரிவெலினோ, கார்லஸ் ஆர்லபர்டோ போன்ற ஜாம்பவான்கள் இருந்தனர். நடப்பு சாம்பியன் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.


FIFA World Cup 2022: ஓமனை ஓரங்கட்டிய ஜெர்மனி.. ஒற்றை சிங்கமாய் கர்ஜித்த நிக்லாஸ் ஃபுல்க்ரக்!


ஜெர்மனியை வீழ்த்திய இத்தாலி


1970 உலகக் கோப்பை தொடரில் மற்றொரு மறக்க முடியாத ஆட்டமாக பைனலுக்கு முன்னேறுவதற்காக ஜெர்மனியை 4-3 என்ற கோல் கணக்கில் இத்தாலி வீழ்த்திய ஆட்டத்தை குறிப்பிடலாம்.
"சென்ற நூற்றாண்டின் சிறந்த ஆட்டம்" என்ற இந்தப் போட்டி வர்ணிக்கப்படுகிறது.
அந்த ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இத்தாலி.
எனினும், பைனலில் பிரேசில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.