உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்களோ, அதை விட இரண்டு மடங்கு ரசிகர்கள் கால்பந்து விளையாட்டிற்கு உண்டு. கால்பந்து தொடரில் பல நாடுகளில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஃபிபா உலகக் கோப்பை என்றதும் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே தொடர் இந்த தொடர் மட்டும்தான். 


அந்தவகையில் ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது வருகின்ற 20ம் தேதி கத்தார் நாட்டில் தொடங்குகிறது. 


32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர். முதல் போட்டியானது வருகின்ற 20ம் தேதி கத்தார்-ஈகுவடார் நாடுகளுக்கிடையே நடைபெற இருக்கிறது. 


இந்த அதிகாரபூர்வ தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவும், உலகக் கோப்பை தொடருக்கு அணிகள் தயாராகும் வகையிலும் ஒவ்வொரு அணிகளும் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஓமன் - ஜெர்மனி அணிகள் மோதினர். 


விறுவிறுப்பான நடந்த முதல் பாதியில் இரு அணி வீரர்களும் வலை அருகில் வரை சென்று, பல முயற்சிகளை தவறவிட்டனர். இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 2வது பாதியில் ஆட்டத்தில் 82வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லாஸ் ஃபுல்க்ரக் அந்த அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். இதுவே இந்த போட்டியில் முதல் கோலாக பதிவானது. தொடர்ந்து, இரு அணிகளும் வேறு எந்த கோலையும் பதிவு செய்ததால் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 






குரூப் இ-யில் உள்ள ஜெர்மனி அணி நவம்பர் 23ம் தேதி ஜப்பான் அணியையும், நவம்பர் 28ம் தேதி ஸ்பெயினையும், டிசம்பர் 2ம் தேதி கோஸ்டா ரிகா அணியை எதிர்கொள்கிறது. 


கால்பந்து போட்டி அட்டவணை 


நவம்பர் 20


கத்தார் vs ஈக்வேடார் - இரவு 9.30 மணி


நவம்பர் 21 


செனகல் vs  நெதர்லாந்து - பிற்பகல் 3.30 மணி


இங்கிலாந்து vs  ஈரான் - மாலை 6.30 மணி 


நவம்பர் 22


அமெரிக்கா vs வேல்ஸ் - அதிகாலை 12.30 மணி 


அர்ஜெண்டினா  vs சவுதி அரேபியா - பிற்பகல் 3.30 மணி 


டென்மார்க் vs துனிசியா - மாலை 6.30 மணி 


மெக்சிகோ vs போலாந்து - இரவு 9.30 மணி 


நவம்பர் 23 


பிரான்ஸ் vs ஆஸ்திரேலியா - அதிகாலை 12.30 மணி 


மொராக்கோ vs குரேஷியா - பிற்பகல் 3.30 மணி 


ஜெர்மனி vs ஜப்பான் -  மாலை 6.30 மணி 


ஸ்பெயின் vs கோஸ்டா ரிகா - இரவு 9.30 மணி 


நவம்பர் 24 


பெல்ஜியம் vs கனடா - அதிகாலை12.30 மணி 


சுவட்சர்லாந்து vs கேமரூன் - பிற்பகல் 3.30 மணி 


உருகுவே vs தென்கொரியா - மாலை 6.30 மணி


போர்ச்சுக்கல் vs கானா - இரவு 9.30 மணி


நவம்பர் 25 


பிரேசில் vs செர்பியா- அதிகாலை 12.30 மணி


வேல்ஸ் vs ஈரான் - பிற்பகல் 3.30 மணி


கத்தார் vs செனகல் - மாலை 6.30 மணி 


நெதர்லாந்து vs ஈக்வேடார் - இரவு 9.30 மணி 


நவம்பர் 26


இங்கிலாந்து vs அமெரிக்கா - அதிகாலை 12.30 மணி 


துனிசியா vs ஆஸ்திரேலியா - பிற்பகல் 3.30 மணி 


போலாந்து vs சவுதி அரேபியா - மாலை 6.30 மணி


பிரான்ஸ் vs டென்மார்க் - இரவு 6.30 மணி 


நவம்பர் 27


அர்ஜெண்டினா vs மெக்சிகோ - அதிகாலை 12.30 மணி


ஜப்பான் vs கோஸ்டா ரிகா - பிற்பகல் 3.30 மணி


பெல்ஜியம் vs மொராக்கோ - மாலை 6.30 மணி 


குரோஷியா vs கனடா - இரவு 9.30 மணி 


நவம்பர் 28 


ஸ்பெயின் vs ஜெர்மனி - அதிகாலை 12.30 மணி


கேமரூன் vs செர்பியா - பிற்பகல் 3.30 மணி 


தென் கொரியா vs கானா - மாலை 6.30 மணி


பிரேசில் vs சுவட்சர்லாந்து - இரவு 9.30 மணி 


நவம்பர் 29 


போர்ச்சுக்கல் vs உருகுவே - அதிகாலை 12.30 மணி 


நெதர்லாந்து vs கத்தார் - இரவு 8.30 மணி


ஈக் வேடார் vs செனகல் - இரவு 8.30 மணி 


நவம்பர் 30 


வேல்ஸ் vs இங்கிலாந்து - அதிகாலை 12.30 மணி 


ஈரான் vs அமெரிக்கா - அதிகாலை 12.30 மணி 


துனிசியா vs பிரான்ஸ் - இரவு 8.30 மணி 


ஆஸ்திரேலியா vs டென் மார்க் - இரவு 8.30 மணி 


டிசம்பர் 1


போலாந்து vs அர்ஜெண்டினா - அதிகாலை 12.30 மணி 


சவுதி அரேபியா vs மெக்சிகோ - அதிகாலை 12.30 மணி 


குரோஷியா vs பெல்ஜியம் - இரவு 8.30 மணி


கனடா vs மொராக்கோ - இரவு 8.30 மணி 


டிசம்பர் 2


ஜப்பான் vs ஸ்பெயின் - அதிகாலை 12.30 மணி 


கோஸ்டா ரிகா vs ஜெர்மனி - அதிகாலை 12.30 மணி 


தென் கொரியா vs போர்ச்சுக்கல் - இரவு 8.30 மணி 


கானா vs உருகுவே - இரவு 8.30 மணி 


டிசம்பர் 3 


கேமரூன் vs பிரேசில் - அதிகாலை 12.30 மணி 


செர்பியா vs சுவிட்சர்லாந்து - அதிகாலை 12.30 மணி