கோட் (GOAT) என்று செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2003 ஆம் ஆண்டில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். முன்கள வீரராக களமிறங்கும் ரொனால்டோ, இதுவரை தனது நாட்டிற்காக 118 கோல்களை அடித்துள்ளார். ரொனால்டோ தனது வாழ்க்கையை கிளப் கால்பந்து போர்த்துகீசிய அணியான ஸ்போர்ட்டிங் சிபியுடன் தொடங்கினார். ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவை தளமாகக் கொண்ட கால்பந்து கிளப்பான அல்-நாசர் எஃப்சிக்காக விளையாடி வருகிறார். ஐந்து முறை Ballon d'Or விருது பெற்ற ரொனால்டோ கடந்த ஆண்டு டிசம்பரில்தான் அல்-நாஸ்ர் எஃப்சிக்காக விளையாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.


முன்னாள் ரியல் மாட்ரிட் வீரரான இவர் இந்த நாளில்தான் ஜோஸ் டினிஸ் அவிரோ மற்றும் மரியா டோலோரஸ் டோஸ் சாண்டோஸ் விவேரோஸ் டா அவிரோ ஆகியோருக்கு 1985 இல் போர்ச்சுகலில் உள்ள மடீராவில் உள்ள ஃபன்ச்சலில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவர் பற்றிய 38 ஸ்வாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.


Ronaldo Birthday: இன்று ரொனால்டோவின் 38-வது பிறந்தநாள்… CR7 குறித்த 38 ஸ்வாரஸ்ய தகவல்கள்!


38 ஸ்வாரஸ்ய தகவல்கள்



  • கிறிஸ்டியானோ ரொனால்டோ Al-Nassr FC உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, விளையாட்டு வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர் என்னும் பெயரை பெற்றுள்ளார்.

  • இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு அல்-நாஸ்ர் எஃப்சி இன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை 853 ஆயிரத்தில் இருந்து 10 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்தது.

  • ரொனால்டோ, தனது பெயரில் 141 கோல்களுடன், சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல் அடித்தவர் என்னும் பெருமையுடன் உள்ளார்.

  • ரொனால்டோ 183 போட்டிகளில் விளையாடி சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் அதிக போட்டிகள் விளையாடிய வீரர் பட்டியலில் முதலிடத்தைப் பெறுகிறார்.

  • இதுவரை மூன்று 'FIFA பிளேயர் ஆஃப் தி இயர்' விருதுகளை வென்றுள்ளார்

  • சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்தவர் - 118.

  • மூன்று சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிகளில் கோல் அடித்த ஒரே கால்பந்து வீரர் ஆவார்.

  • சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் தான் விளையாடிய அணிக்காக ஐந்து முறை பட்டம் வென்று தந்த மிகவும் வெற்றிகரமான வீரர் ஆவார்.

  • ரொனால்டோ, 14 கோல்களுடன், யூரோ வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்னும் பெயரை பெற்றுள்ளார்.

  • ஃபிஃபா உலகக் கோப்பையின் ஐந்து வெவ்வேறு பதிப்புகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றார்.

  • ரொனால்டோ எட்டு கோல்களுடன், ஃபிஃபா உலகக் கோப்பையில் போர்ச்சுகலின் இரண்டாவது அதிக கோல் அடித்தவராக பெருமை பெற்றுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: T. P. Gajendran Passes Away: பெரும் சோகம்.. இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான டி. பி. கஜேந்திரன் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!


கோப்பைகளும் கோல்களும்



  • Ballon d'Or வெற்றிகளைப் பொறுத்தவரை, ரொனால்டோ ஐந்து முறை வென்று இரண்டாவது வெற்றிகரமான வீரராக உள்ளார்.

  • ரொனால்டோவை விட வேறு எந்த ஐரோப்பிய கால்பந்து வீரரும் அதிக பலோன் டி'ஓர் கோப்பைகள் வாங்கியது இல்லை.

  • ரொனால்டோ தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையை ஸ்போர்ட்டிங் சிபி அணியுடன் தொடங்கினார்.

  • அவர் போர்த்துகீசிய கால்பந்து கிளப்பிற்காக நான்கு முறை விளையாடி உள்ளார்.

  • ரொனால்டோ 2003 இல் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.

  • 118 கோல்களை அடித்த பிறகு ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வெளியேறினார்.

  • ரொனால்டோ 450 கோல்களுடன் ரியல் மாட்ரிட்டின் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார்.

  • 2017 இல், ரொனால்டோ 2013 Ballon d'Or கோப்பையை விற்றார்.

  • கால்பந்து வரலாற்றில் தொடர்ச்சியாக ஒன்பது பெரிய தொடர்களின் இறுதிப் போட்டியில் குறைந்தபட்சம் ஒரு கோலையாவது அடித்த ஒரே வீரர் இவர்தான்.

  • ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு 2009 ஆம் ஆண்டில் 80 மில்லியன் பவுண்டுகளுக்கு ஒப்பந்தம் ஆனது அப்போது உலக சாதனையாக இருந்தது.

  • 2015/16 பருவத்தின் முடிவில், ரொனால்டோ தொடர்ந்து ஆறு சீசன்களில் 50 கோல்களை அடித்த ஒரே கால்பந்து வீரர் ஆனார்.



பெருமைகள்



  • மாட்ரிட் டெர்பி போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவர்-18.

  • லா லிகாவில் அதிவேகமாக 150, 200 மற்றும் 300 கோல்களை அடித்த கால்பந்து வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றார்.

  • லா லிகாவில் அதிக ஹாட்ரிக்-களை ரொனால்டோ பெற்றுள்ளார் - 34.

  • ரொனால்டோ ஆகஸ்ட் 2021 இல் மான்செஸ்டர் யுனைடெட் உடன் மீண்டும் இணைந்தார்.

  • ஒரு விண்மீன் கூட்டத்திற்கு ரொனால்டோவின் பெயரில் CR7 என பெயரிடப்பட்டுள்ளது - காஸ்மோஸ் ரெட்ஷிப்ட் 7 (CR7)

  • போட்டியின் எல்லா நிமிடத்திலும் கோல் அடித்த மூன்று கால்பந்து வீரர்களில் இவரும் ஒருவர்.

  • அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் நினைவாக கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயரிடப்பட்டதாக நம்பப்படுகிறது.

  • ரொனால்டோ தொடர்ந்து ரத்த தானம் செய்வதால் அவர் பச்சை குத்திக்கொள்ளவில்லை.

  • ரொனால்டோ போர்ச்சுகலில் உள்ள மடீராவில் உள்ள தனது சொந்த நகரமான ஃபன்ச்சலில் தனது சொந்த அருங்காட்சியகத்தை வைத்துள்ளார்.

  • 107 மில்லியன் பின்தொடர்பவர்களுடன், ட்விட்டரில் அதிகம் பின்தொடரும் விளையாட்டு வீரராக உள்ளார்.

  • இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் நபராக ரொனால்டோ தொடர்ந்து இருக்கிறார்- 543 மில்லியன்.

  • ஃபேஸ்புக்கில் அதிகம் பின்தொடரும் விளையாட்டு வீரரும் இவர்தான் - 161 மில்லியன்.

  • ரொனால்டோ 2008-09 சீசனில் முதல் புஸ்காஸ் விருதை பெற்றார்.

  • ரொனால்டோ அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார் - 196.

  • ரொனால்டோ தனது சொந்த பிராண்டான CR7 ஐ 2013 இல் அறிமுகப்படுத்தினார்.

  • லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மைதானத்தில் சிலை வைத்திருக்கும் நான்காவது கால்பந்து வீரர் ரொனால்டோ ஆவார்.