கால்பந்து உலகின் ஜாம்பவானாக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வரும் கிளப் கால்பந்து போட்டிகளில் பல அணிகளுக்காக ஆடி வருகிறார்.


63வது ஹாட்ரிக் கோல்:


களத்தில் ரொனால்டோ இருக்கிறார் என்றால் நிச்சயம் எதிரணிக்கு கிலி ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். தற்போது நடைபெற்று வரும் சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் ரொனால்டோ ஆடி வருகிறார். இந்த தொடரில் ரொனால்டோ அல் நாசர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.


இந்த நிலையில், இந்த தொடரில் பலமிகுந்த அல் நாசர்ஸ் அணிக்கும் – அல் படொ அணிக்கும் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரொனால்டோ மிரட்டலான ஹாட்ரிக் கோல் அடித்து எதிரணியை துவம்சம் செய்தார். அவரது ஹாட்ரிக் கோல் உள்பட 5-0 என்ற கணக்கில் அல் நாசர்ஸ்  அணி அபார வெற்றி பெற்றது.


சக வீரர்களுக்கு பந்துகளை லாவகமாக பாஸ் செய்தும், பந்துகளை கோல் வலைக்குள் கோலாக்கியும் ரொனால்டோ ஆடிய ஆட்டம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. நேற்றைய போட்டியில் ரொனால்டோ அடித்த ஹாட்ரிக் கோலானது அவரது 63வது ஹாட்ரிக் கோல் ஆகும். 38 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகிலேயே அதிக ஹாட்ரிக் கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.






பந்தை எடுத்துச் சென்ற ரொனால்டோ:


முதலிடத்தில் மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலே உள்ளார். அவர் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு 92 ஹாட்ரிக் கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். மெஸ்ஸி 57 முறை ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.  இந்த போட்டி முடிந்த பிறகு ரொனால்டோ தான் ஹாட்ரிக் கோல் அடித்த பந்தை தன்னுடன் வீட்டிற்கு கொண்டு சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


தற்போதைய கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்களாக மெஸ்ஸியும், ரொனால்டோவும் உள்ளனர். யார் சிறந்த வீரர் என்பதற்காக இருவரது ரசிகர்களும் மோதிக்கொள்வதும் வழக்கம். ரொனால்டோவும், மெஸ்ஸியும் சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கபந்து, தங்க ஷூ ஆகிய விருதுகளை பல முறை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Neymar for al-hilal: அல்-ஹிலாலுக்கு ஒப்பந்தம் ஆன நெய்மர்… சவுதி அரேபிய கிளப் அணிகளில் மேலும் ஒரு நட்சத்திர வீரர்!


மேலும் படிக்க: FIFA WWC 2023: "உதட்டில் முத்தம் கொடுத்தது தப்புதான்.. மன்னிச்சுடுங்க.." - வீராங்கனையை லிப்லாக் செய்த லூயிஸ் ரூபியேல்ஸ்..!