இஸ்தான்புல் நகரில் உள்ள வோடஃபோன் கால்பந்து மைதானத்தில் துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ரசிர்கர்கள் பொம்மைகளை பரிசாக அளித்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இஸ்தான்புல் நகரில் உள்ளூர் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெசிக்கட்ஸ் (Beşiktaş J.K.) மற்றும் அண்டல்யாஸ்போர் (Antalyaspor) அணிகளுக்கான க்ளப் போட்டி நடந்தது. இந்தப் போட்டி தொடங்கியதும் 17 நிமிடங்களுக்கு பிறகு நிறுத்திவைக்கப்பட்டது.
போட்டிவை பார்வையிட வந்திருந்த ரசிகர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பொம்மைகளை தூக்கி வீசினர். ரசிகர்கள் அளிக்கும் பொம்மைகள் சிரியா, துருக்கி அகிய நாடுகளில் தொண்டு இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
துருக்கி, சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி தவிக்கின்றனர்.
துருக்கியில் உள்ள குழந்தைகளில் விளையாட்டுப் பொருட்கள் அவ்வளவாக இல்லாதவர்களுக்கு, அவர்களின் நாட்களை சிறப்பானதாக மாற்றுவதற்கு அங்குள்ள தொண்டு நிறுவனங்களுக்கு கால்பந்து ரசிகர்கள் பொம்மைகளை பரிசளிக்கின்றனர்.
பெஸ்கிடாஸ் அணியினர் இது குறித்து தெரிவிக்கையில், எங்கள் ரசிகர்கள் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக 'This toy is my friend' என்ற பெயரில் பொம்மைகளை வீசி எறிந்தனர். கரடிகள், ஃப்ளமிங்கோ, குதிரை, பென்குயின் உள்ளிட்ட பொம்மைகளை தூக்கி வீசினர்.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மீட்பு பணிகளில் ஈடுபடுவோர்களை பாராட்டும் விதமாக ரசிகர்கள் கை தட்டும் ஒலி மைதானத்தினை நிரப்பியது.
”கால்பந்தைவிட மிக முக்கியமாகவை நிறைய இருக்கின்றன. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டு வருகிறோம். ஒன்றிணைந்து இதிலிருந்து மீள்வோம்.” என்று பெசிக்டாஸ் அணி வீரர் தாயிபி சான்சூ தெரிவித்துள்ளார்.
பெசிக்டாஸ் கால்பந்து க்ளப் அணியின் வீரர்கள் இந்த உதவும் கரங்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.பல்வேறு பொம்மைகளை தூக்கி எறிந்தனர். இதை மைதான ஊழியர்களும், தொண்டு நிறுவன உறுப்பினர்களும் எடுத்துக்கொண்டனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மன உறுதியை வழங்வதற்காக பொம்மைகளை பரிசளிப்பதாக பெசிக்டாஸ் அணியினர் தெரிவித்துள்ளனர். அவரகளுக்கு எங்கள் சார்பில் இப்பொம்மை நண்பனாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொம்மைகளை பரிசளிப்பதை எப்போதும் தொடர்வோம் என்று ரசிகர்கள் உறுதியேற்று கொண்டதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க..
வெளியானது 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பு: யார் எங்கே ஆட்சி?