மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில்  ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது அணியானது.


காலிறுதிக்குத் தகுதி பெற்ற பிறகு, மெஸ்ஸி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை வெல்வதற்கான அணிகள் என நான்கு அணிகளைத் தேர்ந்தெடுத்தார்.


அவர் கூறியதாவது:
எங்கள் அணி அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் எப்போதும் சிறந்த அணிகளில் ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நாங்கள் பைனலுக்கு முன்னேறிவிடுவோம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் அதை ஆடுகளத்தில் நிரூபிக்க வேண்டியிருந்தது. நாங்கள் அதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் நிரூபித்தோம்.


கேமரூனுக்கு எதிராக தோல்வியடைந்த போதிலும், பிரேசில் மிகவும் சிறப்பாக விளையாடுகிறது. அவர்கள் இன்னும் சிறந்த அணிகளில் ஒன்றாக உள்ளனர். நடப்பு சாம்பியன் பிரான்ஸும் சிறப்பாக விளையாடி வருகிறது. ஸ்பெயின், ஜப்பானிடம் தோற்றாலும், மிகச் சிறப்பாக விளையாடும் அணி. இந்த அணிகளை பைனலில் வெல்வது நிச்சயம் கடினமாக இருக்கும்" என்றார் மெஸ்ஸி.


காலிறுதியில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை சனிக்கிழமை எதிர்கொள்கிறது.
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


India New T20 Coach: இந்திய டி20 அணிக்கு இனி புதிய பயிற்சியாளர்.. தீவிர யோசனையில் பிசிசிஐ.. அப்போ ராகுல் டிராவிட்..?


குரூப் சுற்றில் பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. நாக்-அவுட் சுற்றின் முதல் ஆட்டம் கடந்த 3-ஆம் தேதி நடந்தது. அந்த ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி, தரவரிசையில் 16-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவை எதிர்கொண்டது.


மூன்று முறை பைனலுக்கு முன்னேறியுள்ள நெதர்லாந்து அணி அந்த ஆட்டத்தில் அசத்தலாக 3 கோல்களை பதிவு செய்தது. அமெரிக்காவால் 1 கோலை மட்டுமே வலைக்குள் செலுத்த முடிந்தது. இதனால், காலிறுதிக்குள் நுழைந்த முதல் அணியாக நெதர்லாந்து தேர்வானது. அதேநாளில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மோதின.






இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்த இரண்டாவது அணியானது.


22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு தகுதி பெறும் 2ஆவது சுற்று ஆட்டத்தில் இன்றிரவு ஜப்பானும், குரோஷியாவும் மோதுகிறது.