கத்தாரில் நடப்பு உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரிலே டெத் குரூப் என ரசிகர்களால் அழைக்கப்படும் குரூப் ‘ஈ’யில் ஜெர்மனி, ஸ்பெயின், கோஸ்டாரிகா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.


இந்த நிலையில், கடந்த 27-ந் தேதி நடைபெற்ற போட்டியில் ஜெர்மனி – ஸ்பெயின் அணிகள் நேருக்கு நேர் மோதின. ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் இரு அணி சார்பாகவும் கேப்டன்களாவோ, பயிற்சியாளர்களோ அல்லது அணி சார்பில் வீரர்களோ நிருபர்களைச் சந்திக்க வேண்டும். ஆனால், ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக ஜெர்மனி அணி சார்பாக எந்த வீரரும் நிருபர்களைச் சந்திக்கவில்லை. இது நிருபர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அபராதம்:


இந்த நிலையில், நிருபர்களைச் சந்திக்க எந்த வீரரும் அனுப்பாத ஜெர்மன் அணிக்கு ரூபாய் 10 ஆயிரம் ஸ்விஸ் ப்ரான்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 8.5 லட்சத்தை ஃபிபா அபராதமாக விதித்துள்ளது. ஜெர்மனி அணி நிர்வாகம் நிருபர்களைச் சந்திக்க அணி சார்பாக வீரர்களை அனுப்ப மறுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஜெர்மனி அணிக்கு ரூபாய் 8.5 லட்சம் அபராதமாக விதிக்கப்படுகிறது.


அந்த போட்டியில் ஜெர்மன் அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. நான்கு முறை உலகக்கோப்பையை வென்ற ஜெர்மன் அணி இந்த தொடரில் ஜப்பான் அணியிடம் 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெர்மனி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று, ஸ்பெயின் அணி ஜப்பானை வீழ்த்தினால் மட்டுமே ஜெர்மனிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டும்.


கடும் சர்ச்சைகள்:


இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கியது முதல் ஜெர்மனி அணி கடும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த உலகக்கோப்பை கால்பந்தை நடத்தும் கத்தார் தரப்பில் தன்பாலினச் சேர்க்கை குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தன்பாலின சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜெர்மனி கால்பந்து தரப்பு கருத்து தெரிவித்திருந்ததும், அதற்கு ஆதரவாக ஒரே காதல் என்ற பட்டையை கையில் அணிந்து ஆடியதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: FIFA World cup 2022: உலகக் கோப்பை ஆடவர் கால்பந்து வரலாற்றில் இதுவே முதல்முறை... விவரம் உள்ளே!


மேலும் படிக்க: National Sports Awards 2022: சரத்கமலுக்கு கேல்ரத்னா.. பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜூனா...! தேசிய விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!