உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டும், 75ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும் (FREEDOM TROPHY) இந்தியா மற்றும் பங்களாதேஷ் இரு நாடுகளுக்கு இடையே ஆன மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை நத்தம் என்பிஆர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமமானது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணி பவுலர் சந்தோஷ், ஒருநாள் போட்டியின் தொடர்நாயகனாக சன்மேக்கர், T20 போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியா அணியின் ராஜ் மகேஷ், தொடர் நாயகனாக பங்களாதேஷ் அணியின் ரசூல் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒருநாள் தொடரை கைப்பற்றிய பங்களாதேஷ் அணிக்கு FREEDOM TROPHY வெற்றி கோப்பையை தமிழக பாஜக பட்டியல் அணி தலைவர் தடா.பெரியசாமி வழங்கினார். T20 போட்டியின் வெற்றி கோப்பையை தமிழக பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் இரு அணிகளுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டது.
Messi: உலகக்கோப்பைன்னா மெஸ்ஸி ரொம்ப பிஸி..! அனைத்திலும் டாப்... இடைவிடாத நான் - ஸ்டாப் ரெக்கார்ட்!
IND vs BAN 1st Test LIVE: 20 ரன்களுடன் வெளியேறிய சுப்மன் கில்... முதல் விக்கெட்டை இழந்த இந்தியா..!
ஒருநாள் தொடர் நாயகன் விருதை இராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் கதிரவன் வழங்கினார். T20 போட்டிக்கான தொடர் நாயகன் விருதை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன் வழங்கினார். இந்நிகழ்விற்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் மற்றும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரிய துனை தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளர் முத்துக்குமார், முன்னிலையில் வகித்தனர். இந்த தொடருக்கான ஏற்பாட்டினை (பிடிசிஏ) இயக்குநர் மனு, பொது செயலாளர் ரமி ரெட்டி, நிர்வாக குழு உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்