இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார் நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே.
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டில் லாட்ர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அறிமுக வீரர் டேவன் கான்வே சதமடித்து 136 ரன்களுடன் களத்தில் இருந்தார். நிக்கோலஸ் 46 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் : அடுத்தது என்ன ? பிசிசிஐ தீவிரம்!
இரண்டாவது நாள் ஆட்டத்தில் நிக்கோலஸ் அரைசதம் அடித்து 61 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஆனால், ஒருபக்கம் நிலையாக நின்று விளையாடிய டேவன் கான்வே தனது அறிமுகப் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தினார். 194 ரன்கள் எடுத்திருந்த அவர் சிக்சர் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 347 பந்தில் இரட்டை சதம் அடித்த கான்வே 22 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்தார். இதன்மூலம் ஏகப்பட்ட சாதனைகளை கான்வே படைத்துள்ளார்.
சாதனைகள்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடித்த 6ஆவது வீரர்
நியூசிலாந்து அணியில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர்
இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் பதிவு செய்த முதல் வீரர்
லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரரின் அதிகபட்ச ரன்கள் (200 ரன்கள்)
கான்வே இரட்டை சதம் அடித்த அடுத்த ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ராபின்சன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மார்க் வுட் 3 விக்கெட்டுகளும். ஆண்டர்சன் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து 267 ரன்கள் பின் தங்கியுள்ளது. ரோரி பர்ன்ஸ் 59, கேப்டன் ஜோ ரூட் 42 ரன்களுடன் களத்தில் உள்ளனர். கான்வேயின் ஆட்டம், நீண்ட நாட்களுக்கு பின் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு விருந்தாக அமைந்தது.
கோலியுடன் ஒப்பிடுவதை பெருமையாகக் கருதுகிறேன் - பாகிஸ்தான் அணி கேப்டன் நெகிழ்ச்சி